காஸாவை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்... இஸ்ரேலுக்கு உத்தரவிட்ட ட்ரம்ப்
போர் முடிந்ததும் இஸ்ரேல் காஸாவை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் என்று ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளின் தலைவர்கள்
காஸா மக்கள் ஏற்கனவே வேறு பகுதிகளுக்கு புலம்பெயர்ந்துள்ள நிலையில், அமெரிக்க இராணுவத்தின் பயன்பாடு தேவை இருக்காது என்றே ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
காஸா பகுதியை மொத்தமாக கைப்பற்றி மீண்டும் கட்டியெழுப்பும் டொனால்டு ட்ரம்பின் அறிவிப்புக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் காஸாவில் உள்ள பாலஸ்தீன மக்களை வெளியேற்ற தங்களது இராணுவத்திற்கு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. காஸா பகுதியில் அமெரிக்க இராணுவத்தை களமிறக்கும் முடிவு புறந்தள்ள முடியாது என குறிப்பிட்டிருந்த டொனால்டு ட்ரம்ப்,
தற்போது தமது சமூக ஊடக பக்கத்தில் தனது கருத்துக்கு விளக்கமளித்துள்ளார். அதில், பாலஸ்தீனியர்கள் ஏற்கனவே இந்தப் பகுதியில் புதிய மற்றும் நவீன வீடுகளுடன் மிகவும் பாதுகாப்பான மற்றும் அழகான சமூகங்களில் மீள்குடியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
இதனால், அமெரிக்க இராணுவம் காஸாவில் களமிறங்கும் தேவை இருக்காது என்றார். மேலும், போருக்கு பின்னர் காஸாவை அமெரிக்காவிடம் இஸ்ரேல் ஒப்படைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முயற்சிகள் பலனளிக்காது
ட்ரம்பின் முடிவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் பெரும் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், இது வரலாற்றில் இடம்பெறும் முடிவு என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் சவுதி அரேபியா இந்த திட்டத்தை முற்றிலுமாக நிராகரித்தது. அடுத்த வாரம் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவிருக்கும் ஜோர்தான் மன்னர் அப்துல்லா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளதுடன்,
காஸாவை இன்னொரு நாட்டுடன் இணைக்கும் பேச்சுகே இடமில்லை என்றும், பாலஸ்தீன மக்களை காஸாவில் இருந்து வெளியேற்றும் முயற்சிகள் பலனளிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, காஸாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் எந்தவொரு திட்டத்திற்கும் எகிப்து ஆதரவளிக்காது என அறிவித்துள்ளது.
இந்த நிலையில், காஸாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை எதிர்த்த ஸ்பெயின், நோர்வே, அயர்லாந்து போன்ற நாடுகள் அங்குள்ள பாலஸ்தீன மக்களை ஏற்றுக்கொள வேண்டும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |