இரவோடு இரவாக... பெய்ரூட் மீது உக்கிரமாக தாக்கிய இஸ்ரேல்: நெருப்பு கோளமான நகரம்
லெபனானின் பெய்ரூட் நகரம் மீது இஸ்ரேல் விமானப்படை இரவோடு இரவாக உக்கிரமான தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
உக்கிரமான தாக்குதலை
சமீபத்தில் ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்ட அதே புறநகர் பகுதியில் தற்போதும் உக்கிரமான தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது. வெளியான காணொளியில் பற்றியெரியும் கட்டிடங்களின் நடுவே நெருப்பு கோளம் உருவானது பாதிவாகியுள்ளது.
ஆனால் இஸ்ரேல் ராணுவத்தின் இலக்கு குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. உள்ளூர் மக்கள் வெளியிட்டுள்ள தகவலில், தாக்குதலுக்கு முன்னர் ட்ரோன்கள் பறக்கும் சத்தம் கேட்டதாகவும், பலமுறை தாக்குதல் நடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கனவே மக்கள் வெளியேற அறிவுறுத்திய இஸ்ரேல், ஹிஸ்புல்லா மற்றும் அதன் முகாம்கள் மீது தாக்குதல் நடத்த இருப்பதாக அறிவித்திருந்தது. தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம், பெய்ரூட் பகுதியில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவதாக குறிப்பிட்டுள்ளது.
ஹிஸ்புல்லா படைகள்
கடந்த வாரத்தில் Dahieh பகுதியில் அமைந்துள்ள முகாம் ஒன்றில் பதுங்கியிருந்த ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா இஸ்ரேல் வான் தாக்குதலில் கொல்லப்பட்டார். மொத்த 80 குண்டுகளை வீசிய இஸ்ரேல், சுரங்க மறைவிடங்களையும் தகர்த்துள்ளதாக அறிவித்தது.
அந்த பதுங்கு குழியானது 50மீ ஆழத்தில் அமைந்திருந்தது என்றும் ஹிஸ்புல்லா படைகளின் பல மூத்த உறுப்பினர்கள் அந்த பதுங்கு குழியில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இஸ்ரேல் ராணுசம் பெய்ரூட்டில் தாக்குதல் நடத்தும் அதே வேளை ஹிஸ்புல்லா படைகள் இஸ்ரேலின் Kiryat Shmona பகுதி நோக்கி ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
லெபனான் மீதான ஊடுருவலில் இதுவரை 440 ஹிஸ்புல்லா வீரர்களை கொன்றுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. மட்டுமின்றி, ஹிஸ்புல்லா படைகளின் 2,000 முகாம்களும் அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |