காசா மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்: 54 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு
இஸ்ரேலிய ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் 54 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவில் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல்
இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் காசா முழுவதும் குறைந்தது 54 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் மனிதாபிமான மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவ குழு தகவல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் அல்-மவாசி(Al-Mawasi) மாவட்டத்தில் நிகழ்ந்தது. இது முன்னதாக இடம்பெயர்ந்த குடிமக்களுக்கான பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இறந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர்.
இந்த விமானத் தாக்குதலில் ஹமாஸ் உயர் அதிகாரிகள் பலியாகி இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதில் காசாவின் காவல்துறை இயக்குநர் மஹ்மூத் சலா(Mahmoud Salah) மற்றும் அவரது உதவியாளர் ஹுஸாம் ஷஹ்வான்(Hussam Shahwan) ஆகியோரும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து நீடித்து வரும் மோதலின் ஒரு பகுதியாக இந்த சமீபத்திய வன்முறை நிகழ்ந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |