ஈராக் ராணுவ தளத்தில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் கண்டனம்!
ஈராக்கில் உள்ள மக்கள் அணிதிரட்டல் படைகளின் (PMF) தளத்தில் நடந்த குண்டுவெடிப்புகளை ஹமாஸ் "கடுமையாகக் கண்டித்துள்ளது.
இஸ்ரேல்-ஈரான் மோதல்
இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் விதமாக கடந்த வாரம் இஸ்ரேல் மீது 300க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் ஏவி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி தரும் விதமாக நேற்று ஈரானின் அணிதிரட்டல் படைகளின் (PMF) தளத்தில் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு தெற்கே 50 கிமீ (31 மைல்) தொலைவில் உள்ள இஸ்கந்தாரியா(Iskandariya) நகருக்கு அருகில் உள்ள கல்சு(Kalsu) இராணுவ தளத்தில் PMF இன் தலைமையகத்தை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக PMF வட்டாரங்கள் செய்தி நிறுவனங்களுக்கு தெரிவித்தன.
இது மிகப்பெரிய போர் பதற்றத்தை உலக அளவில் அதிகரித்துள்ளது.
ஹமாஸ் கண்டனம்
இந்த நிலையில், ஈராக்கில் உள்ள மக்கள் அணிதிரட்டல் படைகளின் (PMF) தளத்தில் நடந்த குண்டுவெடிப்புகளை ஹமாஸ் "கடுமையாகக் கண்டித்துள்ளது.
மேலும், இது ஈராக்கின் இறையாண்மையை மீறுவதாகக் கருதுகிறது என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “பைடன் நிர்வாகம் தான், காசா பகுதியில் உள்ள எங்கள் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான நாஜி அழிப்புப் போருக்கு அதன் வழங்கல் மற்றும் ஆதரவின் மூலம் பிராந்தியத்தில் விரிவாக்கத்திற்கு" பொறுப்பு என்று ஹமாஸ் குழு அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கிடையில், குண்டுவெடிப்புக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அமெரிக்கா மறுத்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் பகிரங்க அறிக்கையை எதுவும் வெளியிடவில்லை.
ஆனால் பெயர் தெரியாத இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் அமெரிக்க ஊடகங்களுக்கு இஸ்ரேல் இந்த தாக்குதலில் சம்பந்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |