கொல்லப்பட்ட 100க்கும் மேற்பட்டோர்! வடக்கு காசா மீது இஸ்ரேல் சரமாரி ராக்கெட் தாக்குதல்
வடக்கு காசா மீது இஸ்ரேல் நடத்திய பயங்கரமான ஏவுகணை தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலின் பயங்கர தாக்குதல்
லெபனானின் ஈரான் ஆதரவு படையான ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை தொடர்ந்து, அதன் புதிய தலைவராக நைம் காசிமை ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது.
இந்நிலையில் வடக்கு காசாவின் பெய்ட் லஹியா (Beit Lahiya) பகுதி மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேலிய படைகள் நடத்திய இந்த ராக்கெட் தாக்குதலில் இடம்பெயர்ந்த குடிமக்கள் தங்கியிருந்த 5 மாடி குடியிருப்பு கட்டிடம் முற்றிலும் தரைமட்டம் ஆகியுள்ளது.
இதில் குழந்தைகள் உட்பட 109 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவ குழுக்கள் வழங்கிய தகவலின் படி, காசா முழுவதும் உள்ள பகுதிகளில் இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மொத்தமாக 143 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா கண்டனம்
இதற்கிடையில் பாலஸ்தீன மக்களை பட்டினியில் தள்ளும் இஸ்ரேலின் முயற்சிகளை அமெரிக்கா கண்டிப்பதாக ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.
மேலும் காசாவில் நடைபெறும் பேரழிவுகரமான மனிதாபிமான நெருக்கடிகளுக்கு இஸ்ரேல் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |