ஆல்பா, டெல்டா ஓமிக்ரைன் என்ற மூன்றிலும் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன்! தற்போதைய நிலை என்ன ?
இஸ்ரேலை சேர்ந்த 11 வயது பள்ளிச் சிறுவனுக்கு ஆல்பா, டெல்டா மற்றும் ஓமிக்ரைன் என மூன்று வகை வைரஸ்களாலும் பாதிக்கப்பட்டு இருப்பது உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மத்திய இஸ்ரேலின் கபார் சபா என்ற நகரத்தை சேர்ந்த Alon Helfgott என்ற 11 வயது சிறுவனுக்கு ஆல்பா, டெல்டா என்ற இருவகை கொரோனா வைரஸ்களாலும் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது கொரோனாவின் மற்றொரு திரிப்பான ஓமிக்ரைனாலும் பாதிக்கப்பட்டு இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து Helfgott தனியார் ஊடகத்திற்கு பேசுகையில், தான் இப்போது நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாகவும், முதல் இரண்டு பாதிப்புகளின் போது மிகவும் கஷ்டப்பட்டதாகவும், அதிலும் குறிப்பாக முதல் தாக்கிய ஆல்பா வைரஸ் அதிக காய்ச்சலையும், உடல்சோர்வையும் தந்தாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது வந்துள்ள இந்த ஓமிக்ரைனால் எந்த ஒரு உடல்நல குறைவையும் தான் உணரவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த கொரோனா பாதிப்பால் தான் 4 முறை தனிமைப்படுத்துதலில் உட்படுத்தப்பட்டதாகவும், பாதி நேரம் படுக்கையிலும், மொபைலிலும் கழித்து தனக்கு சில நேரங்களில் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால் இப்போது தனிமைப்படுத்தல் பழகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தனிமைப்படுத்துதலால் தனது நண்பர்களை சந்திக்கமுடியாதது வருத்தம் அளிப்பதாகவும், 27 நபர்கள் கொண்ட தனது வகுப்பில் தற்போது 10 வரை இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.