இஸ்ரேல் பொதுத் தேர்தல்: ஆட்சியை இழக்கிறாரா நெதன்யாகு?
Israeli Exit Polls Anti-Netanyahu Coalition Takes Lead: இஸ்ரேலிய பொதுத் தேர்தல் தொடர்பான முதற்கட்ட கருத்துக்கணிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதிக இடங்களில் வெற்றி பெறும் காடி ஜசென்கோட்
இஸ்ரேல் பொதுத் தேர்தலில் காடி ஜசென்கோட் தலைமையிலான மாற்றத்திற்கான கூட்டணி(change bloc) அதிக இடங்களில் வெற்றி பெறும் என முதற்கட்ட கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
காடி ஜசென்கோட் தலைமையிலான மாற்றத்திற்கான கூட்டணி ஒட்டுமொத்தமாக அதிகமான இடங்களை வெற்றி பெறும் என்றும், இருப்பினும் நெசெட்டில்(Knesset)( இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில்) ஆட்சி அமைக்க தேவையான 61 என்ற பெரும்பான்மை இடங்கள் மாற்றத்திற்கான கூட்டணிக்கு கிடைக்கவில்லை என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் நெதன்யாகுவின் தலைமையிலான லிகுட்(Likud) கட்சி, நெசெட்(Knesset) என அழைக்கப்படும் இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய தனித்த கட்சியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் ராணுவ தலைமை தளபதியான காடி ஜசென்கோட்(Gadi Eisenkot), புதிதாக உருவாக்கப்பட்ட யாஷார்(Yashar) என்ற கட்சியை தலைமை தாங்குவதோடு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வீழ்த்த வேண்டும் என்ற எதிர்க்கட்சி கூட்டமைப்பின் முக்கிய இயக்க புள்ளியாகவும் திகழ்ந்து வருகிறார்.
நெதன்யாகுவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற ஒரே முதன்மையான நோக்கத்துடன் மாற்றத்திற்கான அணி(change bloc) என்ற பெயரில் எதிர்கட்சிகளை கூட்டமைப்பை காடி ஜசென்கோட் வழிநடத்தி வருகிறார்.

கருத்துக்கணிப்பு முடிவுகள் என்பது வெறும் முதற்கட்ட மதிப்பீடுகள் மட்டுமே, எனவே இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் இறுதியில் முடிவுகளில் இருந்து மாறுப்பட்டு இருக்கலாம் என்றும் தேர்தல் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
அதிகாரப்பூர்வ முதற்கட்ட தேர்தல் முடிவுகள் நள்ளிரவு (22:00 GMT) முதல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.