பிணைக்கைதியான இஸ்ரேலின் இளம் வீராங்கனையை விடுவித்த ஹமாஸ்: குடும்பத்துடன் இணைந்தார்
போர் நிறுத்த ஒப்பந்தப்படி இஸ்ரேல் பிணைக்கைதியான ஆகம் பெர்ஜரை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது.
பிணைக்கைதிகள் பரிமாற்றம்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ளது. ஒப்பந்தப்படி பிணைக்கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது.
அந்த வகையில் 3வது கட்டமாக விடுவிக்கப் போகும் பிணைக்கைதிகள் குறித்த பட்டியலை ஹமாஸ் வெளியிட்டது.
அதன்படி தற்போது, இஸ்ரேலின் இளம் ராணுவ வீராங்கனை ஆகம் பெர்ஜர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.
உறுதி செய்த இஸ்ரேல்
ஆகம் பெர்ஜர் (20) விடுவிக்கப்படுவதைக் காண, குண்டுகளால் சேதமடைந்த கட்டிடங்கள் மீது மக்கள் திரளாக நின்று வரவேற்றனர்.
அவர்களின் முன் ஊர்வலம்போல் ஆகம் பெர்ஜர் அழைத்துச் செல்லப்பட்டு செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆகம் பெர்ஜர் வந்துவிட்டார் என இஸ்ரேல் அரசு உறுதி செய்துள்ளது.
கடத்தப்பட்ட 5 இளம் வீராங்கனைகளில் பெர்ஜரும் ஒருவர் ஆவார். முன்னதாக ஏனைய 4 பேர் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.
மேலும் ஆர்பெல் யெஹவுட் (29), கதி மோசஸ் (80) ஆகிய இருவரும் இன்று விடுவிக்கப்பட உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |