காஸா ஒப்பந்தம் உறுதி செய்க... ட்ரம்பிடம் இஸ்ரேலிய பணயக்கைதிகள் குடும்பங்கள் வலியுறுத்தல்
காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தை ஜனாதிபதி ட்ரம்ப் இறுதி செய்ய வேண்டும் என்று இஸ்ரேலிய பணயக்கைதிகளின் குடும்பங்கள் வலியுறுத்தியுள்ளன.
எதிர்த்து உறுதியாக
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஜனாதிபதி ட்ரம்ப் ஆகியோர் திங்கட்கிழமை சந்திக்க இருப்பதை முன்னிட்டு இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
நீங்கள் கொண்டு வந்த ஒப்பந்தத்தை நாசமாக்குவதற்கான எந்தவொரு முயற்சியையும் எதிர்த்து உறுதியாக நிற்குமாறு நாங்கள் உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என அந்த குடும்பங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஆபத்து மிக அதிகம், இந்த முன்னேற்றத்தைத் தடம் புரளச் செய்யும் எந்தவொரு குறுக்கீடுகளுக்கும் எதிராக எங்கள் குடும்பங்கள் நீண்ட காலமாக காத்திருக்கின்றன எனவும் ட்ரம்பிற்கான திறந்த கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் கட்டாயம் என ட்ரம்ப் கூறி வரும் நிலையிலேயே, அந்த குடும்பங்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
மட்டுமின்றி, காஸா போர் நிறுத்தம் தொடர்பில் கடந்த வாரம் ஐ.நா. பொதுச் சபையின் கூட்டங்களுக்கு இடையே அரபு மற்றும் இஸ்லாமிய தலைவர்களுக்கு ட்ரம்ப் 21 அம்சத் திட்டம் ஒன்றை வழங்கியுள்ளார்.
முடிக்கும் மட்டும்
மேலும், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான ஒவ்வொரு திட்டத்தையும் நெதன்யாகு முறியடித்து, தமது அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே செயல்பட்டு வந்துள்ளதையும் அந்த குடும்பங்கள் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், போர் நிறுத்தத்தின் முதல் இரண்டு நாட்களில் 47 பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒரு முழுமையான காஸா அமைதித் திட்டத்தை ஜனாதிபதி ட்ரம்ப் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், காஸாவில் தொடங்கிய வேலையை முழுமையாக முடிக்கும் மட்டும் யார் பேச்சையும் கேட்பதில்லை என ஐ.நா மன்றத்தில் நெதன்யாகு முழங்கியிருந்தார்.
அத்துடன், மேற்கத்திய நாடுகளால் சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்டுவரும் பாலஸ்தீன அரசாங்கத்தையும் முடக்க தம்மால் இயன்ற அனைத்தையும் முன்னெடுக்க இருப்பதாகவும் நெதன்யாகு அறிவித்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |