தாக்குதலை தடுக்க தவறிவிட்டேன்! பதவியை ராஜினாமா செய்த மூத்த இஸ்ரேல் அதிகாரி
ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பிறகு, இஸ்ரேலிய இராணுவ புலனாய்வு தலைவர் ராஜினாமா செய்துள்ளார்.
7ம் திகதி தாக்குதல்
கடந்த ஆண்டு 7ம் திகதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில் இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டு குடிமக்கள் என 1200 பேர் கொல்லப்பட்டனர்.
ஹமாஸின் இந்த திடீர் தாக்குதலை போர் தாக்குதலாக அறிவித்த இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா மீது சரமாரி தாக்குதலை முன்னெடுத்தனர்.
இதையடுத்து இஸ்ரேலிய படைகளின் இந்த போர் தாக்குதலில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 34,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
புலனாய்வு தலைவர் ராஜினாமா
இந்நிலையில் அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலை முன்னறிவித்து தடுக்க தவறிய காரணத்திற்காக இஸ்ரேலின் இராணுவ புலனாய்வு தலைவர் மேஜர் ஜெனரல் அஹரோன் ஹலிவா ராஜினாமா செய்துள்ளார்.
மேஜர் ஜெனரல் அஹரோன் ஹலிவா பல மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார், நாட்டின் மீதான மிகப்பெரிய தாக்குதலை முன்னறிவித்து தடுக்க தவறி விட்டதாக தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பிறகு பதவியை ராஜினாமா செய்த முதல் மூத்த அதிகாரி மேஜர் ஜெனரல் அஹரோன் ஹலிவா ஆவார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |