ஹமாஸ் தாக்குதலில் கண்முன்னே காதலி மரணம்: 2 ஆண்டுகள் கழித்து தீக்குளித்து உயிரைவிட்ட காதலன்
2023ஆம் ஆண்டு அக்டோபரில் நடந்த நோவா இசை விழாவில், ஹமாஸ் தாக்குதலில் மபெல் ஆடம் என்ற இளம்பெண் கொல்லப்பட்டார்.
கொல்லப்பட்ட காதலி
அப்போது அவரது காதலரான ரோயி ஷலீவ் (30) ஆயுதக்குழுவின் தாக்குலில் இருந்து படுகாயங்களுடன் உயிர்தப்பினார்.
தனது கண்முன்னே காதலி கொல்லப்பட்டதால் இரண்டு ஆண்டுகளாக ரோயி விரக்தியில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், ரோயி ஷலீவ் டெல் அவிவ் நகரில் தனது வீட்டின் அருகே காருக்குள் இருந்தவாறு பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி, தீக்குளித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இனிமேல் தொடர முடியாது என்று கூறி ஒன்லைனில் ஒரு செய்தியை வெளியிட்டார்.
முன்னதாக, ரேயியின் தாயாரும் இதேபோல் காருக்குள் பெட்ரோல் ஊற்றி தீவைத்து உயிரை மாய்த்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |