காஸாவில் பணயக்கைதிகளை கொன்றோம்: இஸ்ரேல் ராணுவம் ஒப்புதல்
மாதங்களுக்கு முன்னர் காஸாவில் சடலமாக மீட்கப்பட்ட பணயக்கைதிகள் இஸ்ரேல் ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாடு ஒப்புக்கொண்டுள்ளது.
ஹமாஸ் படைகளால்
காஸாவில் ஹமாஸ் படைகளின் சுரங்கத்தில் இரண்டு ராணுவ வீரர்கள் உட்பட மூவர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் இஸ்ரேல் ராணுவம் விசாரணையை முடித்துள்ளதாக ஞாயிறன்று அறிவித்தது.
விசாரணையில் அந்த மூவரும் ஹமாஸ் படைகளின் மூத்த அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டதாகவும், நவம்பர் மாதம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலானது ஹமாஸ் படைகளின் மூத்த அதிகாரிக்கு வைக்கப்பட்ட இலக்கு என்றும் இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட மூவரும் அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகளால் கடத்தப்பட்டவர்கள். அவர்களின் சடலங்கள் டிசம்பர் மாதம் மீட்கப்பட்டது. ஆனால் மரண காரணம் மிக சமீபத்தில் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த மூவரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியின் அடிப்படையில், அவர்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம் என முடிவு செய்ததாகவும், அதன் பின்னர் நடந்த விசாரணையில் உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மீட்கும் எண்ணம் இல்லை
காஸாவில் Jabalia பகுதியில் உள்ள சுரங்கத்திலேயே அவர்கள் மூவரும் சிறைவைக்கப்பட்டிருந்தனர். அந்த வளாகத்திலேயே இஸ்ரேல் நிர்வாகத்தால் தேடப்படும் ஹமாஸ் தலைவரும் பதுங்கியிருந்துள்ளார்.
மேலும், தாக்குதலுக்கு ஆயத்தமான வேளையில் பணயக்கைதிகள் தொடர்பான தகவல் ஏதும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றே இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால் இஸ்ரேல் முன்னெடுத்துவரும் தாக்குதலில் தொடர்ந்து பணயக்கைதிகள் பலர் கொல்லப்பட்டு வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இஸ்ரேல் அரசாங்கத்திற்கு பணயக்கைதிகளை மீட்கும் எண்ணம் இல்லை என்றும், அரசியல் ஆதாயத்திற்காக போரை நீட்டிக்கச் செய்வதாகவும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தற்போது குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |