கசிந்த காணொளி... இஸ்ரேல் இராணுவ சட்டத்தரணியை சிறையில் தள்ளிய நெதன்யாகு
இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீன ஆண் கைதி ஒருவர் கூட்டு வன்கொடுமைக்கு இலக்கான சம்பவம் தொடர்பில் கசிந்த காணொளியால், தற்போது இஸ்ரேல் இராணுவ சட்டத்தரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கொடூர சித்திரவதை
கடந்த வாரம் இஸ்ரேல் செய்தி ஊடகம் ஒன்றில் வெளியான காணொளி ஒன்று, கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாலஸ்தீன ஆண் கைதி ஒருவர் இஸ்ரேல் இராணுவத்தினரால் கொடூர சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கும் இரையாக்கப்படுகிறார்.

சிறையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவான இந்த காணொளியை செய்தி ஊடகம் ஒன்றிற்கு கைமாற இஸ்ரேல் இராணுவத்தின் முதன்மையான சட்டத்தரணி Yifat Tomer-Yerushalmi அனுமதி அளித்துள்ளார்.
குறித்த காணொளி செய்தி ஊடகத்தில் வெளியானதும் அரசியல் ரீதியாக கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அத்துடன் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. கடந்த ஆண்டு பதிவான அந்த காணொளியால், சட்டத்தரணி Yifat Tomer-Yerushalmi கடந்த வாரம் பதவி விலக கட்டாயப்படுத்தப்பட்டார்.
தனது அலுவலகம் விசாரித்து வரும் குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை அம்பலப்படுத்த முயன்றவருக்கு, தீவிர வலதுசாரி அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களால் கடும் நெருக்கடி ஏற்பட்டது.
அவரது பதவி பறிக்கப்பட்டதன் பின்னரும், தனிப்பட்ட முறையில் அவமானப்படுத்தலுக்கு இரையானார். இந்த நிலையில், தமது குடும்பத்தினருக்கு குறிப்பொன்றை எழுதி வைத்துவிட்டு, கடற்கரை பகுதியை தமது காரையும் கைவிட்டு மாயமானார்.

இது நெதன்யாகு அரசாங்கத்தின் நெருக்கடிக்கு பயந்து அவர் உயிரை மாய்த்துக் கொண்டார் என கூறப்பட, இஸ்ரேல் பொலிசார் தீவிரமாக அவரை தேடத்தொடங்கினர். இஸ்ரேல் இராணுவத்தின் ட்ரோன் படையும் களமிறங்கியது.
தீவிர வலதுசாரி
இந்த நிலையில், ஞாயிறன்று இரவு அவர் உயிருடன் மீட்கப்பட்டார். ஆனால், அதன் பின்னரும் தீவிர வலதுசாரி அரசியல்வாதிகள் அவரை குறிவைத்தனர்.

சாத்தியமான ஆதாரங்களை அழிக்கும் ஒரு வழியாக தற்கொலை முயற்சியை நடத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டினர். தற்போது அவர் மீது மோசடி செய்ததாக சந்தேகம், நம்பிக்கை மீறல் மற்றும் நீதியைத் தடுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளது.
அவர் தற்போது மத்திய இஸ்ரேலில் உள்ள ஒரு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் இராணுவ வீரர்களால் வன்கொடுமை செய்யப்பட்ட அந்த பாலஸ்தீன கைதி குற்றுயிராக விடுவிக்கபப்ட்டுள்ளார்.

வயிறு மற்றும் மார்பில் மோசமான காயங்களு விலா எலும்புகள் நொறுக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையை நாடியுள்ளார். அவரது நிலை மிக மோசமாக உள்ளதாகவே பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |