காஸா கைதிகளுக்கு இஸ்ரேல் இராணுவம் செய்த கொடுமை... கசிந்த காணொளியால் பதவி இழந்த அதிகாரி
இஸ்ரேல் இராணுவத்தின் துஸ்பிரயோக காணொளி ஒன்று கசிந்த நிலையில், விசாரணையை எதிர்கொள்ளும் பொருட்டு இஸ்ரேலிய இராணுவத்தின் தலைமை சட்ட அதிகாரி ராஜினாமா செய்துள்ளார்.
குற்றவியல் வழக்குகள்
தொடர்புடைய காணொளியில், காஸா போர் சமயத்தில் கைது செய்யப்பட்ட ஒரு பாலஸ்தீனியரை இஸ்ரேல் இராணுவத்தினர் கொடூரமாக துன்புறுத்தி துஸ்பிரயோகத்திற்கு இரையாக்குவது பதிவாகியிருந்தது.

குறித்த காணொளியை ஊடகங்களில் வெளியிட தாம் அனுமதி அளித்துள்ளதை ஒப்புக்கொண்ட அட்வகேட் ஜெனரல் மேஜர் ஜெனரல் யிஃபாத் டோமர்-யெருஷால்மி பதவி விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 2024ல் வெளியான அந்த காணொளியால், ஐந்து இஸ்ரேல் இராணுவ வீரர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. மட்டுமின்றி, பாலஸ்தீன கைதிகள் மீது இஸ்ரேல் இராணுவத்தின் அந்த நடவடிக்கை கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
ஆனால் இஸ்ரேல் வலதுசாரி அரசியல்வாதிகள் இந்த விசாரணைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மட்டுமின்றி, பாலஸ்தீனியர்கள் தொடர்பில் இஸ்ரேல் இராணுவத்தினரை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது.

1,700 பாலஸ்தீன கைதிகள்
இருப்பினும், காணொளியை கசியவிட்டது முறையான செயல் என்றே டோமர்-யெருஷால்மி பதிலளித்துள்ளார். அக்டோபர் 7 தாக்குதலை அடுத்து வெடித்த இஸ்ரேல் - காஸா போரின் நடுவே பாலஸ்தீன மக்கள் கொத்தாக கைது செய்யப்பட்டனர்.
போரின் போது இஸ்ரேலிய தடுப்புக்காவலில் சிக்கியுள்ள பாலஸ்தீனியர்கள் கடுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக மனித உரிமைகள் குழுக்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், 20 இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கு ஈடாக காஸா போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக இந்த மாதம் சுமார் 1,700 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
அதில் பலர் இஸ்ரேல் இராணுவத்தின் மிக மோசமான சித்திரவதை மற்றும் துஸ்பிரயோகத்திற்கு இலக்கானதாக தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |