செயற்கை நுண்ணறிவு திறனுடன்…இஸ்ரேல் தயாரித்துள்ள சிறிய ரக தற்கொலை ட்ரோன்கள்: வீடியோ
இஸ்ரேல் நிறுவனம் வடிவமைத்துள்ள சிறிய ரக தற்கொலை தாக்குதல் ட்ரோன்கள் உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
இஸ்ரேலின் தற்கொலை தாக்குதல் ட்ரோன்கள்
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த எல்பிட்(Elbit) என்ற நிறுவனம் சிறிய ரக தற்கொலை ட்ரோன்களை வடிவமைத்துள்ளது.
இந்த ட்ரோன்கள் திறந்த கதவுகள் வழியாக கட்டிடத்தின் உள் நிலைகளுக்கு சென்று எதிரிகளின் மீது நேரடி தாக்குதலை முன்னெடுக்கின்றன.
பிரித்தானியாவில் அலுவலகங்களை கொண்ட எல்பிட் என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த ட்ரோன்களுக்கு லானியஸ்(Lanius) ட்ரோன்கள் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Elbit Systems, Israel's largest arms firm in the UK, has unleashed its artificial-intelligence suicide drones, capable of raiding Palestinian homes undetected before detonating.#ShutElbitDown pic.twitter.com/Fx0vgQ3AH6
— Quds News Network (@QudsNen) July 10, 2023
இவை ப்ரொப்பல்லர்களுடன் கூடிய எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலர் அளவில் காணப்படும் இந்த ட்ரோன்கள் எதிரிகளின் நிலைகளில் உள்ள கதவுகள் திறந்து உள்ளதா அல்லது மூடிய நிலையில் உள்ளதா என்பதையும், அப்பகுதிகளுக்கு உள்ளே செல்ல முடியுமா அல்லது முடியாதா என்றும் அதிகாரிகளுக்கு தெரிவித்து விடுகின்றன.
செயற்கை நுண்ணறிவு உடன் வடிவமைப்பு
இந்த ட்ரோன்கள் செயற்கை நுண்ணறிவு திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது, எனவே இவை கட்டிடங்களை முழுமையாக ஸ்கேன் செய்து எதிரிகளை துல்லியமாக அடையாளம் காண்கிறது.
elbitsystems.com
எப்படி இருப்பினும் மனித உத்தரவுகளின் அடிப்படையிலேயே இவற்றின் தாக்குதல்(துப்பாக்கி சூடு அல்லது வெடித்தல்) திறன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தங்களது நிறுவனத்தின் மிக சிறிய ட்ரோன் மாடலான இந்த ட்ரோன்களுக்கு கொலைக்காரன் (butcher) என்ற புனைப்பெயரையும் சூட்டியுள்ளனர்.
இந்த ட்ரோன் ஆனது கடந்த 2022ம் ஆண்டு வெளி வந்து இருந்த நிலையில், இந்த ட்ரோன் தொடர்பான சமீபத்திய ப்ரொமோஷன் வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அனைவரது கவனத்தையும் இந்த லானியஸ் ட்ரோன்கள் ஈர்த்துள்ளது.
elbitsystems.com
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |