அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 18 பேர் கொல்லப்பட்ட நிலையில் வலுக்கும் கண்டனம்!
பாலஸ்தீனத்தின் வெஸ்ட் பேங்க் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதல்
ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்க் பகுதியில் உள்ள துல்கர்ம் அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய படைகள் புதிய தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.
இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 18 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக பாலஸ்தீனத்தின் சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்களுக்கு எதிரான படுகொலையை உடனடியாக தடுக்க சர்வதேச நடவடிக்கைகளுக்கும் பாலஸ்தீன அரசாங்கம் தன்னுடைய அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளது.
பாலஸ்தீன ஜனாதிபதி அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர், இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இத்தகைய தாக்குதல்கள் பிராந்தியத்தில் யாருக்கும் அமைதி மற்றும் நிலைத்தன்மையை தராது, மாறாக வன்முறையை மட்டுமே அதிகரிக்க செய்யும் என பாலஸ்தீன் செய்தி நிறுவனம் WAFA தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடுதல் தகவல்கள் எதுவும் சேர்க்காமல், துல்கர்ம் அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |