போர் நிறுத்தத் திட்ட அறிவிப்பு ஒருபக்கம்... காஸா மீது இஸ்ரேல் குண்டுவீச்சு மறுபக்கம்
ஹமாஸ் நிர்வாகமும் இஸ்ரேலும் போர் நிறுத்தத் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்ட பிறகும் காஸா மீது இஸ்ரேலின் குண்டுவ்விச்சு தொடர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வடக்கு காஸா
காஸாவில் பல முறை குண்டுவீச்சு நடத்தப்பட்டதாக காஸா சிவில் பாதுகாப்பு முகமை வியாழக்கிழமை அறிவித்துள்ளது. குறிப்பாக வடக்கு காஸாவின் பகுதிகளில் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கத்தார் தலைமையில் ஒருபக்கம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையிலும், இஸ்ரேல் இராணுவம் காஸா மக்கள் மீது உக்கிரத் தாக்குதலை முன்னெடுத்து வந்துள்ளது.
மட்டுமின்றி, இதுவரை சமாதான ஒப்பந்தத்திற்கு என ஹமாஸ் தரப்பில் உருவாக்கப்பட்டுள்ள குழுக்களின் தலைவர்கள் அனைவரையும் இஸ்ரேல் வான் தாக்குதலால் படுகொலை செய்துள்ளது.
ஆனால், இஸ்ரேல் அமைதியை நாடும் ஒரு நாடு என்றே அதன் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி வந்துள்ளார். இந்த நிலையில் தற்போது சமாதான ஒப்பந்தத்தின் முதற்கட்டத்திற்கு ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீன கைதிகளும்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்ட 21 அம்ச அமைதி ஒப்பந்தம் முன்வைக்கப்பட்டதை அடுத்து, வியாழக்கிழமை இரு தரப்பும் முதற்கட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்த வார இறுதியில் உயிருடன் உள்ள 20 பணயக்கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. மேலும், ஒப்பந்தம் கையெழுத்தான 72 மணி நேரத்திற்குள் பாலஸ்தீன கைதிகளும் பரிமாற்றம் செய்யப்படுவார்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2023 ல் ஹமாஸ் படைகள் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கையின் ஒருபகுதியாக 251 இஸ்ரேலியர்களை காஸாவிற்குள் பணயக்கைதிகளாகப் பிடித்து வந்தனர், அதில் தற்போது 47 பேர் எஞ்சியுள்ளனர், இதில் 25 பேர் இறந்துவிட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |