இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதல்: கொல்லப்பட்ட 300 பாலஸ்தீனியர்கள்!
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசா மீது தாக்குதல்
காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் இலக்குகளை குறிவைத்து நடத்திய தீவிர தாக்குதலில் குறைந்தது 330 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர்.
ஜனவரி 19-ஆம் திகதி உருவான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்த நிலையில், ரமலான் மாதத்தில் இந்த கொடூரமான தாக்குதல் அரங்கேறியுள்ளது.
காசா சிவில் பாதுகாப்பு அமைப்பின் அறிக்கையின்படி, காசா நகரம், டெயிர் அல்-பலா, கான் யூனிஸ், ரஃபா உள்ளிட்ட வடக்கு, மத்திய மற்றும் தெற்கு காசா முழுவதும் எதிரொலித்த இந்த தீவிர வான்வழித் தாக்குதலில் பெரும்பாலும் அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.
"குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள்" என 300க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், சுமார் 150 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவம் அறிக்கை
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) X தளத்தில் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளன.
அரசியல் மட்டத்தின் உத்தரவின்படி, காசா பகுதியில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
In accordance with the political echelon, the IDF and ISA are currently conducting extensive strikes on terror targets belonging to the Hamas terrorist organization in the Gaza Strip. pic.twitter.com/mYZ1WBPVPG
— Israel Defense Forces (@IDF) March 18, 2025
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காஸாவை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளையும் இஸ்ரேல் மூடியுள்ளது.
நெதன்யாகுவின் விளக்கம்
ஹமாஸ் பிணைக் கைதிகளை விடுவிக்க தொடர்ந்து மறுத்ததாலும் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் மத்தியஸ்தர்கள் முன்வைத்த முன்மொழிவுகளை நிராகரித்ததாலும் இந்த தாக்குதல் மீண்டும் நடத்தப்பட்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
போரை மீண்டும் தொடங்கி பிணைக்கைதிகளை தியாகம் செய்ய பிரதமர் நெதன்யாகு முடிவு செய்துள்ளார் என்று ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |