கேள்விக்குறியாகும் காஸா போர்நிறுத்தம்... இரவோடு இரவாக இஸ்ரேல் நடத்திய கொடுஞ்செயல்
காஸா மீது இரவோடு இரவாக இஸ்ரேல் முன்னெடுத்த கடுமையான தாக்குதலில் 104 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
35 சிறார்கள்
அமெரிக்கா முன்னெடுத்த இந்த காஸா போர் நிறுத்தமானது தற்போது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது. அத்துடன், போர்நிறுத்தம் ஏற்படுத்தியதன் பின்னர் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவென்றும் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் முன்னெடுக்கும் மிகக் கொடூரமான தாக்குதல்களில் ஒன்று இதுவென இரணுவ நிபுணர்கள் தரப்பு கூறுகின்றனர். இதில் 35 சிறார்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 200 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
ஜனாதிபதி ட்ரம்ப் தலையிட்டு முன்னெடுக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை எதுவும் பாதிக்காது என்று அவர் கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு இஸ்ரேல் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் முகாம் ஒன்று இலக்காகியுள்ளது. பிரான்ஸ் செய்தி நிறுவனமான AFP இறப்பு எண்ணிக்கை 104 என உறுதி செய்துள்ளது.
பாலஸ்தீன போராளிகளுக்கும் இஸ்ரேலிய இராணுவத்திற்கும் இடையே செவ்வாய்க்கிழமை மாலை நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, பெஞ்சமின் நெதன்யாகு தாக்குதல்களுக்கு உத்தரவிட்டார்.

ஆனால் இந்த விவகாரத்தில் ஹமாஸ் படைகள் தலையிடவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஹமாஸ் போர்நிறுத்த மீறல்கள் குறித்து விவாதிக்க நெதன்யாகு அவசரக் கூட்டத்தை கூட்டினார்.
அரசியல் நெருக்கடி
அதில், போர்நிறுத்தத்திற்கு ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து வ்னத தீவிர வலதுசாரி அமைச்சர்கள் மீண்டும் போருக்கு திரும்ப வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனிடையே, இஸ்ரேல் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினால் அவர்கள் கண்டிப்பாக பதில் தாக்குதல் நடத்துவார்கள் என ட்ரம்ப் செய்தியாளர்களுக்கு பதிலளித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை இரவு நடந்த தாக்குதல், ஆரம்பத்தில் இருந்தே வன்முறையால் பாதிக்கப்பட்ட போர்நிறுத்தத்தின் அனைத்து பலவீனங்களையும் அம்பலப்படுத்தியுள்ளது.
அத்துடன், சொந்த அரசியல் நெருக்கடியால் நெதன்யாகு பல காரணங்களைப் பட்டியலிட்டு போர்நிறுத்தத்தை மீற வாய்ப்புள்ளதாக அப்போதே நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியிருந்தது.
சமீபத்திய இரவு நேர தாக்குதல்களுக்கு முன்பு, காஸாவில் போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து இஸ்ரேல் தரப்பி 80 மீறல்களைச் செய்ததாகவும், 97 பாலஸ்தீனியர்களைக் கொன்றதாகவும், 230 பேர் காயமடைந்ததாகவும் காசாவின் ஊடக அலுவலகம் குற்றம் சாட்டியிருந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |