ஈரான் போருக்காக ஈராக்கில் ரகசிய தளத்தை அமைத்த இஸ்ரேல்., அதிர்ச்சியூட்டும் தகவல்
இஸ்ரேல், ஈரானுடன் போர் சூழ்நிலையை எதிர்கொள்ளும் நோக்கில் ஈராக்கில் ஒரு ரகசிய இராணுவ தளத்தை அமைத்து பாதுகாத்ததாக சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தளம், ஈரானின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் முக்கியமான ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடன் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் ஆதரவுடன், இஸ்ரேல் இந்த தளத்தை ஈராக்கின் மேற்கு பகுதியில் அமைத்துள்ளது.
இது ஈரானின் தாக்குதல்களை தடுக்கவும், தேவையானபோது நேரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பயன்படும்.

குறிப்பாக, ஈரான் ஆதரவு கொண்ட மிலிடன்ட் குழுக்கள் ஈராக்கில் செயல்படுவதால், இஸ்ரேலின் பாதுகாப்பு திட்டத்தில் இந்த தளம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த ரகசிய தளம், விமானங்கள், ட்ரோன்கள், ஏவுகணைகள் போன்றவற்றை நிறுத்தி இயக்கும் திறன் கொண்டதாகவும், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நேரடியாக களமிறங்கி பாதுகாத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான்-இஸ்ரேல் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த தகவல் வெளிப்படுவது மத்திய கிழக்கு அரசியல் சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கும் என கூறப்படுகிறது.
இருப்பினும் இதுகுறித்தது, ஈராக் அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கவில்லை.
சில அறிக்கைகள், இந்த தளம் ஈரானின் அணு திட்டங்களைத் தடுக்க உருவாக்கப்பட்டதாகவும், எதிர்காலத்தில் பெரிய தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படலாம் என்றும் எச்சரிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |