போர் நிறுத்தம் ஈரானுக்கு மட்டுமே - தாக்குதலை தொடரும் இஸ்ரேல்
ட்ரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்தாலும், லெபனானில் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.
தாக்குதலை தொடரும் இஸ்ரேல்
ஈரான் மற்றும் இஸ்ரேல் அமெரிக்கா இடையேயான போர் கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி தொடங்கி, நடைபெற்று வந்தது.

நேற்று ஈரான் விதித்த 10 நிபந்தனைகளை ட்ரம்ப் ஏற்பதாக அறிவித்த நிலையில், 2 வார காலம் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டது.
டிரம்ப்பின் போர் நிறுத்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு,"அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிராந்திய நாடுகள் மீதான அனைத்துத் தாக்குதல்களையும் நிறுத்தும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஈரான் மீதான தாக்குதல்களை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கும் டிரம்பின் முடிவை இஸ்ரேல் ஆதரிக்கிறது.

இருப்பினும், ஈரானின் ஆதரவைப் பெற்றுள்ள ஹிஸ்புல்லாவின் அச்சுறுத்தலை முறியடிக்கும் நோக்கில், தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை தொடரும். இந்த இரண்டு வார கால போர் நிறுத்தம் லெபனானை உள்ளடக்கவில்லை." என தெரிவித்துள்ளார்.
ஈரானின் கூட்டாளிகள் மீதான தாக்குதல்கள் முடிவுக்கு வர வேண்டும் என ஈரான் நிபந்தனை விதித்துள்ள நிலையில், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மீது தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது முரணனாக உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதல்
இதனால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், சில நாடுகளில் பரஸ்பர ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடைபெற்றதாகவே கூறப்படுகிறது.
ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக கூட பஹ்ரைனில் தாக்குதல் நடைபெற்றதாகவும், பாதுகாப்பு சைரன் ஒலிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
MOI: Civil Defence extinguished a fire in the facility as a result of the Iranian aggression. No injuries were reported.
— Ministry of Interior (@moi_bahrain) April 8, 2026
இதே போல் சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஈரான் இஸ்ரேலிலும் வெடிப்பு சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
டிரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்தாலும் ஈரான் மற்றும் இஸ்ரேல் தாக்குதலை தொடர்வதாக கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |