ஆதித்யா-எல்1 மிஷன்! சூரியனை ஆராய இஸ்ரோவின் திட்டம்!
சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக ஆதித்யா-எல்1 என்ற செயற்கைக்கோளை அனுப்புவதற்கு இஸ்ரோ தயாராகி வருகிறது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் சற்றுமுன் வெளியாகி மிகுந்த கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சந்திரயான் -3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலவில் கால் பதித்த மகிழ்ச்சியில் இஸ்ரோ உள்ளது.இந்த உற்சாகத்தால் அடுத்தகட்ட திட்டங்களை வேகமாக தொடங்கவுள்ளது.
அதில் சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 மிஷன் மிகவும் முக்கியமானது.இந்த செயற்கைக்கோள் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி காலை 11.50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்படுகிறது.
ஆதித்யா-எல்1 செயற்கைக்கோளில் மொத்தம் 7 விதமான Pay Loads இடம்பெற்றிருக்கும்.சூரியனை தொலைவில் இருந்தபடியே ஆய்வு செய்யவுள்ளது.
அதாவது, ஹாலோ எல்1 என்ற சூரியனின் சுற்றுவட்டப் பாதைக்கு சென்று ஆய்வை மேற்கொள்ளும். இதற்காக எல்.வி.எம்3 என்ற ராக்கெட் விண்ணில் அனுப்பப்பட உள்ளது.
?PSLV-C57/?️Aditya-L1 Mission:
— ISRO (@isro) August 28, 2023
The launch of Aditya-L1,
the first space-based Indian observatory to study the Sun ☀️, is scheduled for
?️September 2, 2023, at
?11:50 Hrs. IST from Sriharikota.
Citizens are invited to witness the launch from the Launch View Gallery at… pic.twitter.com/bjhM5mZNrx
ஹாலோ எல்1 சுற்றுவட்டப் பாதையை அடைந்ததும் இஸ்ரோவிற்கு தகவல் அனுப்ப தொடங்கிவிடும்.சூரியனின் மேற்பகுதி எப்படி இருக்கிறது? அதிலிருந்து வெளிப்படும் வெப்பம்? சூரிய வெளிச்சம்? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யவுள்ளது.
மேலும் சூரியனின் மூன்று விதமான படலங்களை ஆய்வு செய்கிறது. சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பப்படும் முதல் செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |