விவசாயத்தில் விண்வெளி தொழில்நுட்பம் - ISRO அறிமுகப்படுத்திய குறுகிய கால பயிற்சி திட்டம்
வேளாண் துறையில் விண்வெளி தொழில்நுட்பங்களைப் புரிந்துகொள்ள ISRO புதிய குறுகிய கால பிடிப்பை (course) தொடங்கியுள்ளது.
இந்த பயிற்சி திட்டத்திற்கு யார் விண்ணப்பிக்கலாம், பாடநெறி கட்டணம், காலம், தொடர்பு விவரங்கள் மற்றும் பல முக்கிய தகவல்களை எங்கே பார்க்கலாம்.
இந்திய அரசின் விண்வெளி சீர்திருத்தக் குறிக்கோளுக்கிணங்க, IN-SPACe மற்றும் ISRO இணைந்து “Essentials of Space Technology in Agriculture” எனும் குறுகிய காலத் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்தப் பயிற்சி, வேளாண் துறையில் விண்வெளி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் முறைமைகள் குறித்து அடிப்படை அறிவை வழங்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குறுகிய கால பயிற்சி திட்டம் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 1, 2025 வரை நடைபெறவுள்ளது.
பயிற்சி முடிவில் கட்டாய வினாடி வினா தேர்வு நடத்தப்படும். தேர்வில் வெற்றி பெறும் பங்கேற்பாளர்களுக்கு பயிற்சியை முடித்த சான்றிதழ் வழங்கப்படும்.
யார் யார் விண்ணப்பிக்கலாம்?
- கல்லூரி பேராசிரியர்கள்
- தொழில்துறை வல்லுநர்கள்
- பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள்
- ஆய்வாளர்கள்
குறிப்பு: இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
பயிற்சி நடைபெறும் இடம்:
அமிடி பல்கலைக்கழகம், நொய்டா
கட்டணம்:
ரூ.15,000 (உணவுச் செலவுகள் உட்பட)
பணம் செலுத்த: https://bharatkosh.gov.in/
தங்கும் வசதி: ஒரு நாளைக்கு ரூ.900/- மதிப்பில், பல்கலைக்கழக வளாகத்தில் பகிர்ந்துகொள்ளக்கூடிய அறை வசதி கிடைக்கும் (விருப்பத்தின் அடிப்படையில் பதிவு செய்யலாம்)
தொடர்புக்கு, பணம் செலுத்தும் விவரங்களுக்கு:
Ratnesh Kumar
Deputy Director, F & A IN-SPACe
மின்-அஞ்சல்: ratnesh.kumar75@inspace.gov.in
தொலைபேசி எண்: 079-26916956
இந்த வகை பயிற்சிகள், மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு விண்வெளித் தொழில்நுட்பங்களை நேரடியாக வேளாண் உற்பத்தியில் பயன்படுத்தும் திறனை ஏற்படுத்துகிறது.
IN-SPACe மற்றும் ISRO இணைந்து மேற்கொள்ளும் இந்தப் பாடத்திட்டம், இந்தியாவின் பிரபலமான விண்வெளி பொருளாதார இலக்குகளை அடைய உதவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
ISRO space tech agriculture course 2025, IN-SPACe Amity University training, ISRO short-term course Noida, Space technology in Indian farming, ISRO agriculture workshop registration, Essentials of Space Tech course ISRO, ISRO training for academicians and researchers