இஸ்ரோ விஞ்ஞானி விஷப்பாம்பு கொத்தியதில் உயிரிழப்பு! இருட்டு நேரத்தில் பகீர் சம்பவம்
இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானியை கொத்திய விஷப்பாம்பு
கர்நாடக மாநிலத்தின் ஹாசனை சேர்ந்தவர் போய்னி கிருஷ்ணய்யா (41). இவர் இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்தார்.
இரு தினங்களுக்கு முன்னர் கிருஷ்ணய்யாவை மாலை 7 மணிக்கு இருட்டிய நேரத்தில் விஷப்பாம்பு கடித்துள்ளது.
telanganatoday
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இதையடுத்து மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட கிருஷ்ணய்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் சடலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு பல்வேறு தரப்பினர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கிருஷ்ணய்யா அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை படித்தவர், உயர்கல்விக்கு பின்னர் பிடெக் படிப்பை முடித்த அவருக்கு இஸ்ரோவில் பணி கிடைத்தது.
உயிரிழந்த கிருஷ்ணய்யாவுக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.