சுவிட்சர்லாந்தில் இனி இதற்கு தடை! அமுலுக்கு வந்த புதிய சட்டம்: வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சுவிட்சர்லாந்து குடிமக்கள் முழு முகத்தை மறைக்கும் முக்காடுகளை தடை செய்யும் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
அதிகாரப்பூர்வ வாக்கெடுப்பின் முடிவுகளின்படி, 51.21% வாக்காளர்கள் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் மக்கள் பொதுஇடங்களில் தங்கள் முகங்களை மறைக்கக்கூடாது, அதேசமயம் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைக்காக முகக் கவசம் அணிவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
புதிய தடை அடிப்படையில், குறிப்பாக முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா மற்றும் நிகாப் தடை செய்யப்படுகிறது. இருப்பினும், புதிய தடை வழிபாட்டுத் தலங்களுக்கு பொருந்தாது.
சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையில் 5.2% முஸ்லிம்கள் உள்ளனர், பெரும்பாலும் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, துருக்கி மற்றும் கொசோவோவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முகம் மறைக்கும் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், சுவிட்சர்லாந்து இதேபோன்ற தடைகளை அறிமுகப்படுத்திய பல ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்துள்ளது.
2011 ஆம் ஆண்டில் பிரான்ஸ் முழு முகத்தை மறைக்கும் முக்காடுகளை தடை செய்தது. அப்போதிருந்து, டென்மார்க், ஆஸ்திரியா, நெதர்லாந்து மற்றும் பல்கேரியா ஆகியவை பொது இடங்களில் இத்தகைய ஆடைகளுக்கு தடைகளை விதித்துள்ளன.
சுவிட்சர்லாந்து அதன் நேரடி ஜனநாயகத்தின் கொள்கைக்கு பிரபலமானதாகும், அங்கு குடிமக்கள் புதிய சட்டங்களில் வாக்களிக்க அல்லது பழைய சட்டங்களை திருத்த அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.