உக்ரைனில் பல இடங்களில் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகள்! செயல் இழக்க பல ஆண்டு ஆகும்.. பகீர் தகவல்
உக்ரைன் நகரங்களில் கிடக்கும் கண்ணி வெடிகள் மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்ய பல ஆண்டு காலம் ஆகும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உக்ரைன் உளதுறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி கூறுகையில், ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைன் நகரங்களில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகள் மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்ய பல ஆண்டு காலம் ஆகும்.
ஏனெனில் உக்ரைன் மீது ஏராளமான குண்டுகள் மற்றும் கண்ணிவெடிகள் வீசப்பட்டன, பெரும்பகுதி வெடிக்கவில்லை, அவை இடிபாடுகளுக்கு அடியில் உள்ளன.
போர் முடிந்தவுடன் உக்ரைனில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள மேற்கத்திய நாடுகளின் உதவி தேவைப்படும்.
ஆங்காங்கே ஏவுகணை, ராக்கெட் தாக்குதல் காரணமாக பல இடங்கள் தீப்பிடிப்பதால் அதை சமாளித்து அணைக்க தேவையான உபகரணங்களுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.