தொழில் நுட்பக் கோளாறு... ஜேர்மனி முழுவதும் ஸ்தம்பித்த ரயில் சேவை
நேற்று இரவு ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக,ஜேர்மனி முழுவதும் ரயில் சேவை ஸ்தம்பித்தது.
தொழில் நுட்பக் கோளாறு...
ரயில்வே வலையமைப்பில் சர்வதேசத் தொடர்புகளுக்காகப் பயன்படுத்தப்படும், ரயில்வேக்கான உலகளாவிய மொபைல் தொடர்பு அமைப்பு (GSM-R) எனப்படும் தகவல் தொடர்பு அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நேற்று, அதாவது செவ்வாய்க்கிழமை இரவு, நாடு முழுவதும் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் நீடித்த இந்த பிரச்சினையின்போது, நாடு முழுவதும் ரயில்கள் ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானர்கள்.
ஜேர்மனியின் தேசிய ரயில் நிறுவனமான Deutsche Bahn நிறுவனம், இந்த நிலைமைக்காகப் பயணிகளிடம் மன்னிப்புக் கோரியதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு டாக்சி மற்றும் ஹோட்டல் வவுச்சர்களையும் வழங்கியது.
இந்நிலையில், நள்ளிரவுக்குப் பின் அந்த கோளாறு சரி செய்யப்பட்டதாகவும், ரயில் சேவை மெல்ல சகஜ நிலைக்குத் திரும்பி வருவதாகவும் Deutsche Bahn நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்றாலும், தாமதங்களும் ரயில் சேவை ரத்து செய்யப்படுதலும் இன்னும் கொஞ்ச நேரத்துக்கு நீடிக்கக்கூடும் என்றும் ரயில் நிறுவனம் எச்சரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |