கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் இது இலவசம்! குவியும் மக்கள் கூட்டம்: எந்த நாட்டில் தெரியுமா?
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைவருக்கும் டோனட் இலவசம் என்று கூறப்பட்டதால், அங்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இப்போது உலகம் முழுவதும் பரவி பல கோடி உயிர்களை எடுத்து வருகிறது. இந்த வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட போதும், அதற்கான உரிய விழிப்புணர்வை இல்லை.
இதனால், இந்த தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஆண்டு முழுவதும் டோனட் இலவசமாக வழங்கப்படும் என்று அங்குள்ள க்ரிஸ்பி க்ரீம் என்ற கடை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இது குறித்து வெளியாகியுள்ள செய்தியில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், தடுப்பூசி அட்டையைக் காண்பித்து, தனிநபராக எங்கள் கடைக்கு வந்து தினந்தோறும் இலவச டோனட்டைப் பெற்றுச் செல்லலாம். ஆண்டு முழுவதும் இந்தச் சலுகையை வழங்க முடிவெடுத்துள்ளோம்.
அதே நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது மக்களின் தனிப்பட்ட முடிவு. அதில் நாங்கள் தலையிடவில்லை.
இருப்பினும், எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நாடு பாதுகாக்கப்படும் என்ற எண்ணத்தில் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
அதே சமயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கும் மார்ச் 29 முதல் மே 24-ஆம் திகதி வரை திங்கட்கிழமைகளில் இலவச டோனட்டும் காபியும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
