இத்தாலி மற்றும் சுவிஸ் ஆல்ப்ஸ் பகுதிகளில் இருந்து பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் வெளியேற உத்தரவு
கடுமையான பனிப்பொழிவு காரணமாக இத்தாலி மற்றும் சுவிஸ் ஆல்ப்ஸ் பகுதிகளை விட்டு சுற்றுலாப் பயணிகள் உடனடியகா வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
அவசர நடவடிக்கைகள்
அதிகரித்து வரும் பனிச்சரிவு அபாயங்கள் அதிகாரிகளை அப்பகுதியில் உள்ள கிராமங்களை காலி செய்து முழுப் பகுதிகளையும் மூட கட்டாயப்படுத்தியுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.

சில மணி நேரங்களுக்குள், வடக்கு இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்தின் பகுதிகளில் வானிலை மிகவும் மோசமடைந்ததால் அவசர நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
சாலை மூடல்கள் மற்றும் வெளியேற்றங்களும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. திங்கட்கிழமை தொடங்கி, சுவிட்சர்லாந்து மற்றும் வடக்கு இத்தாலியின் சில பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புதிதாக 40 சென்டிமீற்றர் வரை பனி பெய்துள்ளதாக பிராந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன, இது பனிச்சரிவு அபாயத்தை கணிசமாக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து இரண்டாவது அதிகபட்ச எச்சரிக்கை நிலை தற்போது இப்பகுதி முழுவதும் அமுலில் உள்ளது, மேலும் இன்றும் கடுமையான பனிப்பொழிவு தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியேறும் ஆணை
இத்தாலியின் பீட்மாண்ட் பகுதியில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது, இதனால் சுற்றுலா சார்ந்த நகரமான ரோச்செமோல்ஸில் இருந்து சுற்றுலாப்பயணிகளை உடனடியாக வெளியேற்றுமாறு நகராட்சி ஆணையை பிராந்திய அரசாங்கம் பிறப்பித்துள்ளது.
அதே நேரத்தில், பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகள் என இருவருக்கும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டு, அணுகல் தடை விதிக்கப்பட்டது.

குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் மொத்த 40 பேர்களுக்கு உடனடி வெளியேறும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில், பனிச்சரிவு அபாயங்கள் கடுமையாக அதிகரித்ததால், ஆர்சியர்ஸ் நகராட்சியில் சுமார் 50 பேர் தங்கள் தங்குமிடத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பனிப்பொழிவுடன், சூறாவளி அளவிலான வலுவுடன் கடுமையான காற்றாலும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |