சவுதி விமான தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: சேதமடைந்த இத்தாலிய போர் விமானம்
Italian Fighter Jet get attacked in Saudi: சவுதி விமான தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இத்தாலிய போர் விமானம் சேதமடைந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தாலிய போர் விமானம் சேதம்
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படைக்கும் சவுதி அரேபியாவின் ராணுவத்திற்கும் இடையே மோதலானது தீவிரமடைந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் வியாழக்கிழமை மேற்கு சவுதி அரேபியாவின் தைஃப் பகுதியில் அமைந்துள்ள கிங் பஹ்த் விமான தளத்தின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இத்தாலிய ராணுவத்திற்கு சொந்தமான போர் விமானம் ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது.
இந்த தகவலை வெள்ளிக்கிழமை இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் குவிடோ குரோசெட்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான போர் விமானம், ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிரான கூட்டுப்படைக்காக இத்தாலியின் தரப்பாக வழங்கப்பட்ட போர் விமானம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இத்தாலிய வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், வேறு எந்தவொரு உபகரணங்களும் சேதம் அடைய வில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் பதற்றமான இந்த பகுதியில் இத்தாலிய வீரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நிலைமையை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.