எலான் மஸ்க் எங்கள் நாட்டு அரசியலில் தலையிடவேண்டாம்: நாடொன்றின் ஜனாதிபதி பகிரங்க அறிவிப்பு
எலான் மஸ்க் தங்கள் நாட்டு அரசியலில் குறுக்கிடுவதை நிறுத்தவேண்டுமென இத்தாலி ஜனாதிபதி பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
எங்கள் நாட்டு அரசியலில் தலையிடவேண்டாம்
எலான் மஸ்க் எங்கள் நாட்டு அரசியலில் தலையிடவேண்டாம் என இத்தாலி நாட்டு ஜனாதிபதியான Sergio Mattarella கூறியுள்ள விடயம், அந்நாட்டு பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாகியுள்ளது.
இத்தாலியில், நீதித்துறைக்கு அரசாங்கத்துக்கும் இடையே உரசல் அதிகரித்துவரும் நிலையில், எலான் மஸ்க் தெரிவித்த கருத்தொன்றே இத்தாலி ஜனாதிபதியை இப்படி பேசவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலி பிரதமரான ஜார்ஜியா மெலானி புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டுவருவதை பலரும் அறிந்திருக்கலாம்.
சமீபத்தில் மெலானி ஏழு புலம்பெயர்ந்தோரை அல்பேனியா நாட்டுக்கு நாடுகடத்த, நீதிபதிகள் மெலானியின் முடிவை எதிர்க்க, நாடுகடத்தப்பட்டவர்களை மீண்டும் இத்தாலிக்குக் கொண்டுவரும் நிலை உருவானது.
இந்நிலையில், மெலானியின் நண்பரான எலான் மஸ்க், அந்த நீதிபதிகள் பதவி விலகவேண்டும் என்று சமூக ஊடகமான எக்ஸில் எழுதியிருந்தார்.
அது தொடர்பில்தான், இப்போது இத்தாலி ஜனாதிபதியான Sergio Mattarella, எலான் மஸ்க் தங்கள் நாட்டு அரசியலில் குறுக்கிடுவதை நிறுத்தவேண்டுமென்று கூறியுள்ளார்.
இத்தாலி ஒரு தலைசிறந்த ஜனநாயக நாடு என்று கூறியுள்ள Mattarella, இத்தாலியைப் பார்த்துக்கொள்ள, இத்தாலிக்குத் தெரியும் என்று கூறியுள்ளார்.
இத்தாலி ஜனாதிபதியான Sergio Mattarella, அந்நாட்டில் மிகவும் மதிக்கப்படுபவர் என்பதுடன், அவர் இதுபோல் விமர்சனம் முன்வைப்பது அசாதாரணம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |