இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பயங்கரம்: பனிச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு
இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் பனிச்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
பனிச்சரிவில் சிக்கி இருவர் பலி
சனிக்கிழமை காலை இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஏற்பட்ட பிரம்மாண்டமான பனிச்சரிவில் சிக்கி மலையேறிகள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஆஸ்திரியாவின் எல்லைக்கு அருகில் உள்ள 2,669 மீட்டர் உயரமுள்ள ஹோஹே ஃபெர்ஸ்(HOhe Ferse) பகுதியில் இந்த பிரம்மாண்ட பனிச்சரிவானது ஏற்பட்டுள்ளது.
இந்த பனிச்சரிவில் இரண்டு பேர் உயிரிழந்து இருப்பதுடன், பலர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலியின் பாதுகாப்பு மலை மீட்புப் படையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், மொத்தம் 25 மலைச்சறுக்கு வீரர்கள் இந்த பனிச்சரிவில் சிக்கி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மூன்று பேர் பலத்த காயங்களுடன் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பிரம்மாண்ட பனிச்சரிவானது, 150 மீட்டர் அகலமும், பல நூறு மீட்டர் நீளமும் கொண்டதாக இருந்ததாக விவரிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், பனிச்சரிவை ஆய்வு செய்யவும் 6 ஹெலிகாப்டர்கள், தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் என கிட்டத்தட்ட 80 மீட்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஏற்படும் தொடர்ச்சியான மலைச்சரிவுகளுக்கு சுற்றுச்சூழல் காரணிகளே முக்கிய மாற்றம் என்று நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |