இஸ்ரேல் இராணுவம் தாக்கலாம்... காஸா Flotilla குழுவினருக்கான பாதுகாப்பை கைவிட்ட இத்தாலி
காஸா மக்களுக்கான உதவிப்பொருட்களுடன் புறப்பட்டுள்ள சர்வதேச Flotilla குழுவினருக்கான பாதுகாப்பை கைவிடுவதாக இத்தாலி அறிவித்துள்ளது.
500க்கும் மேற்பட்ட
இதனால் இஸ்ரேலியப் படைகளால் Flotilla குழு பாதிக்கப்படக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த Flotilla குழுவானது 40க்கும் மேற்பட்ட படகுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் மற்றும் ஸ்வீடிஷ் காலநிலை பிரச்சாரகர் கிரெட்டா துன்பெர்க் உட்பட 500க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்களுடன் பாலஸ்தீனப் பகுதி மீதான இஸ்ரேலின் முற்றுகையை உடைப்பதை நோக்கமாகக் கொண்டு பயணப்பட்டுள்ளனர்.
ஆனால் தற்போது இந்த 40க்கும் மேற்பட்ட படகுகள் காஸா கடற்கரையில் இருந்து 278 கிலோ மீற்றர் தொலைவுக்கு வந்ததும், இத்தாலியின் கடற்படை கப்பல் பாதுகாப்பு நடவடிக்கையை கைவிடும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலியின் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றில் இதை வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன், சைப்ரஸ் துறைமுகத்தில் உதவிப்பொருட்களை விட்டுச்செல்லவும் இஸ்ரேலியப் படைகளுடனான மோதலைத் தவிர்ப்பதற்கும் சமரசத் திட்டத்தை ஏற்குமாறு இத்தாலி Flotilla உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ளது.
17 ஆண்டுகளாக
ஆனால் Flotilla குழு அதை ஏற்க மறுத்துள்ளது. கடந்த வாரம் Flotilla படகுகள் ட்ரோன்களால் தாக்கப்பட்டதை அடுத்து, Flotilla படகுகளுக்கு உதவ இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகள் கடற்படைக் கப்பல்களை அனுப்பின.
ஆனால், இஸ்ரேல் இராணுவத்துடன் மோதலுக்கு வாய்ப்பில்லை என குறிப்பிட்டனர். இந்த நிலையில், காஸா பகுதியில் Flotilla படகுகளை நெருங்க அனுமதிப்பதில்லை என இஸ்ரேல் உறுதிபட தெரிவித்துள்ளது. மேலும், ஹமாஸ் படைகளுக்கு எதிரான போரின் ஒரு பகுதியாக 17 ஆண்டுகளாக நீடிக்கும் காஸா முற்றுகை சட்டப்பூர்வமானது என்றும் வாதிடுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |