புகைப்படங்களை அனுமதியின்றி அணுகிய பேஸ்புக்: மெட்டாவிற்கு €805 மில்லியன் அபராதம்
Italy fined Meta with €805m over Unauthorized Photo Access: அனுமதியின்றி புகைப்படங்களை அணுகிய விவகாரத்தில் மெட்டா நிறுவனத்திற்கு €805 மில்லியன் அபராதமாக இத்தாலி விதித்துள்ளது.
மெட்டாவிற்கு €805 மில்லியன் அபராதம்
மெட்டா நிறுவனம் ஆண்ட்ராய்டு பயனர்களின் புகைப்பட தொகுப்புகளை அனுமதியின்றி அணுகியதாக குற்றம்சாட்டி இத்தாலியின் தரவுப் பாதுகாப்பு ஆணையம் மெட்ட நிறுவனத்திற்கு 805 மில்லியன் யூரோ அபராதமாக விதித்துள்ளது.
பேஸ்புக் செயலில் உள்ள Post Ideas என்ற அம்சம் பயனர்களின் தனிப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஸ்கேன் செய்தது தொடர்பாக கிட்டத்தட்ட 2 கோடி ஸ்மார்ட்போன் பயனர்களிடம் எந்தவொரு முறையான தகவலையும் தெரிவிக்க தவறி விட்டதாக ஒழுங்குமுறை ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்திற்கு கேலரியை அணுகுவதற்கான பொதுவான அனுமதி வழங்கப்பட்டு இருந்தாலும், Post Ideas என்ற இந்த அம்சத்தில் பயனர்களுக்கு தானியங்கி பரிந்துரைகளை உருவாக்க கேலரியை பயன்படுத்தும் அனுமதி வழங்கப்பட்டு இருப்பதை ஆரம்பக்கட்ட அறிவிப்பில் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்று ஒழுங்குமுறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே அடுத்த 60 நாட்களுக்குள் இந்த அனுமதியை தடை செய்ய வேண்டும் என்றும், இதற்கான தனியான மற்றும் வெளிப்படையான அனுமதி பெறும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மெட்டா நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
இத்தாலிய கண்காணிப்பு அமைப்பால் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட மிகக் கடுமையான அபராதங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.