500 ராணுவ வீரர்களை களமிறக்கும் இத்தாலி அரசு: வன்முறையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த மெலோனி
Italy govt will deploys 500 troops to protect Milan: இத்தாலியில் நிகழ்ந்து வரும் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர 500 ராணுவ வீரர்களை அந்நாட்டு அரசு களமிறக்க முடிவு செய்துள்ளது.
இத்தாலியில் வெடித்த வன்முறை
விலைவாசி உயர்வு, பணவீக்கம், போதுமான பொதுச் சேவைகள் பற்றாக்குறை ஆகியவற்றை முன் நிறுத்தி இத்தாலியின் முக்கிய பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் களமிறங்கினர்.
இந்த போராட்டத்தில் வன்முறை குழுக்களும், சிறார்களும் புகுந்ததை அடுத்து இத்தாலியின் முக்கிய பகுதிகளில் தொடர் வன்முறைகள், மோதல்கள் மற்றும் திருட்டு சம்பவங்கள் மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது.
இதையடுத்து மிலான் நகரில் உள்ள புகழ்பெற்ற வியா மோன்டெனபோலியோன் (Via Montenapoleone) என்ற உயர்தர சொகுசுப் பொருட்கள் விற்பனை நிலையம் திங்கட்கிழமை முன்னெச்சரிக்கையாக தங்கள் காட்சி கூடங்களை காலி செய்துவிட்டு கடையை மூடியது.

500 ராணுவ வீரர்கள் குவிப்பு
இந்நிலையில் மிலான் நகரை வன்முறை மற்றும் திருட்டு கும்பல்களிடம் இருந்து பாதுகாக்கும் முயற்சியாக சுமார் 500 ராணுவ வீரர்களை இத்தாலிய அரசு களமிறக்க திட்டமிட்டுள்ளது.
திங்கட்கிழமை இத்தாலியின் துணை பிரதமர் மட்டீயோ சல்வினி(Matteo Salvini) ராணுவ வீரர்கள் குவிப்பு தொடர்பாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை விவாதிக்கப்பட உள்ளது.
இத்தாலிய பிரதமர் ஜார்ஜியோ மெலோனி அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் இந்த நெருக்கடி தொடர்பாக பாதுகாப்பு துறை தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தி, வன்முறையாளர்களுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.