இத்தாலியில் அதிர்ச்சி! நீர்மின் நிலையம் வெடிப்பு: பலியான உயிர்கள்
இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் வெடிப்பு சம்பவத்தால் நாடு கடும் துயரில் ஆழ்ந்துள்ளது.
இத்தாலி நீர்மின் நிலைய வெடிப்பு
இத்தாலியின் வடக்கு பகுதியில் செவ்வாய்க்கிழமை மதியம் நீர் மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பால் அந்நாடு பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
இதில் நான்கு பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.
போலோக்னா(Bologna) நகரில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் சுவினா ஏரியில்(Lake Suviana) உள்ள ஆலை ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது.// ஆரம்ப தகவல்கள் மூன்று பேர் உயிரிழந்ததாக கூறினாலும், பின்னர் இந்த எண்ணிக்கை நான்கு பேராக உயர்ந்துள்ளது.
?#BREAKING: At least 4 dead and 6 missing in power plant dam blast in Bologna, Italy pic.twitter.com/Bn38P0pbYZ
— World Source News 24/7 (@Worldsource24) April 9, 2024
மீட்பு குழுவினருக்கு ஏற்பட்டுள்ள சவால்
தகவல்களின்படி, வழக்கமான பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தபோது நீருக்கடியில் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிப்பின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்ததால், ஆலையின் நிலத்தடி கட்டமைப்பின் ஒரு பகுதி இடிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதி சுமார் 30 மீட்டர் ஆழத்தில் இருப்பதால் மீட்பு குழுக்களுக்கு மிகப்பெரிய சவால் இருந்து வருகிறது.
காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்
காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பதற்கான தேடல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் படுகாயமடைந்து சிலர் விமானம் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அதில் 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெடிப்பு ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வருகிறது. அதிகாரிகள் இதுவரை நீர்மின் நிலையத்தில் வெடிப்பு ஏற்படுத்திய காரணத்தை கண்டறியவில்லை.
ஆலையின் உரிமையாளரான Enel நிறுவனம், எஞ்சியிருக்கும் அனைத்து தொழிலாளர்களையும் வெளியேற்றி, அவசர கால மீட்பு பணியாளர்களுடன் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Italy hydroelectric plant explosion,
Lake Suviana explosion,
Enel Green Power plant accident,
Italy power plant search and rescue,
Italy missing workers dam explosion,
Italian dam safety concerns,
Hydroelectric plant safety protocols,