பள்ளிகளில் புர்கா, நிகாப் அணிய நிரந்தர தடை: ஐரோப்பிய நாடொன்றில் அதிரடி அறிவிப்பு
Italy Imposes a Bans On Wearing Burga in School: பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் அணிய முழுமையாக தடை செய்யும் அவசர சட்டத்தை இத்தாலிய அரசு நிறைவேற்றியுள்ளது.
ஜார்ஜியோ மெலோனி விளக்கம்
அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய இத்தாலிய பிரதமர் ஜார்ஜியோ மெலோனி, புர்கா அணிவது நாட்டின் பாதுகாப்பு பிரச்சினை என்று வாதிட்டார்.
அத்துடன் எந்தவொரு பெண்ணையும், சிறுமியையும் புர்கா அணிய சொல்லி அவர்களின் முகத்தை மூடச் சொல்வது அவர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் என்று தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் மாணவர்கள் சிறப்பாக ஒருங்கிணைவதை உறுதி செய்வதே இந்த தடை சட்டத்தின் முக்கிய நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
இத்தாலிய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் எலி ஷிலைன் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது குழந்தைகளின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் புதிய அரசியல் முற்றுகை என்றும் அரசை கடுமையாக சாடியுள்ளார்.
பள்ளிகளில் மொழி சமநிலை
புர்கா தடை சட்டத்தை போல, பள்ளிகளில் மொழி சமநிலையை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பள்ளிகளில் உள்ள ஒவ்வொரு வகுப்பிலும் இத்தாலிய மொழியில் புலமை குறைந்த மாணவர்கள் அல்லது புதிதாக பள்ளியில் இணைந்த வெளிநாட்டு மாணவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 30% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.