2 லட்சம் ஆணுறைக்கு மத்தியில் நடந்த பிரம்மாண்ட பேஷன் ஷோ: ஆச்சரியப்பட வைக்கும் காரணம்
பாலியல் சுகாதாரத்தை உணர்த்தும் வகையில் இத்தாலியில் 2 லட்சம் ஆணுறைகளுக்கு மத்தியில் நடந்த பேஷன் ஷோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மிலான் ஃபேஷன் ஷோ
உலகில் நடைபெறும் டாப் 4 பேஷன் ஷோக்களில் இத்தாலியின் மிலான் நகரில் நடைபெறும் பேஷன் ஷோவும் ஒன்றாகும்.
அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான மிலான் பேஷன் ஷோ இத்தாலி நகரில் சிறப்பாக நடைபெற்று வருகிறது, இந்த விழாவை முன்னணி ஆடம்பர ஆடை பிராண்ட் நிறுவனமான “டீசல்” நடத்தி வருகிறது.
அத்துடன் இந்த மிலான் பேஷன் ஷோவில், பாலியல் சுகாதாரத்தை உணர்த்தும் விதமாக நடத்தப்பட்ட தனித்துவமான பேஷன் ஷோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
2 லட்சம் ஆணுறைகளுக்கு மத்தியில் நடந்த பேஷன் ஷோ
நாள்தோறும் சுமார் 10 லட்சம் பேருக்கு பாலியல் சார்ந்த நோய்கள் பரவுவதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது, இதற்கிடையில் சர்வதேச அளவில் பாலியல் நோய் பரவல் தொடர்பான விழிப்புணர்வுகள், பரப்புரைகள் தீவிரமாக நடத்தப்படுகின்றன.
AP
இந்நிலையில் இத்தாலியின் மிலான் நகரில் நடத்தப்பட்ட பேஷன் ஷோவில் பாலியல் நோய் பரவல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதுகாப்பான பாலியல் உறவை அறிவுறுத்தும் விதமாகவும் சுமார் 2 லட்சம் ஆணுறைகளுக்கு மத்தியில் பேஷன் ஷோ ஒன்று நடத்தப்பட்டது.
பேஷன் மாடல்கள் மலை போல குவிக்கப்பட்டு இருந்த ஆணுறைகளுக்கு மத்தியில் பேஷன் உடைகளை அணிந்து வந்து ரேம்ப் வாக் செய்தனர்.
3 லட்சம் ஆணுறைகள் இலவசம்
பாதுகாப்பான பாலியல் உறவு என்ற நோக்கில் இந்த பேஷன் ஷோ நடத்தப்பட்டது என்று நிகழ்ச்சி ஏற்பாடு நிறுவனம் டீசல் தெரிவித்துள்ளது.
AP
அத்துடன் பாலியல் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக 3 லட்சம் ஆணுறைகளை தனது ஸ்டோர்களில் இலவசமாக வழங்கப் போவதாக டீசல் நிறுவனம் அறிவித்துள்ளது.