இத்தாலியில் பூர்வீக சொத்து.. கிலோ கணக்கில் தங்கம்,வெள்ளி.., சோனியா காந்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு?
முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சொத்து மதிப்பு அவரது வேட்புமனுத் தாக்கலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடவுள்ளார். அதற்காக அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
சொத்து மதிப்பு எவ்வளவு?
சோனியா காந்தி தனது வேட்புமனுவில், 27 லட்ச ரூபாய் மதிப்பில் இத்தாலியில் குடும்ப பூர்வீக சொத்தில் பங்கு இருப்பதாக கூறியுள்ளார். அதிலிருந்து தனக்கு தனக்கு வருமானம் வந்து கொண்டிருப்பதாகவும், கையிருப்பில் ரூ.90,000 இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அதில், தனது மொத்த சொத்து மதிப்பு 12 கோடியே 53 லட்சத்து 76 ஆயிரத்து 822 ரூபாய் என்று தெரிவித்துள்ளார். அதுதவிர, ரூ.49 லட்சம் மதிப்பில் 1.5 கிலோ தங்கம் மற்றும் 8 கிலோ வெள்ளி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2014 -ம் ஆண்டு சோனியா காந்தியின் சொத்து மதிப்பு ரூ.9 கோடியே 28 லட்ச ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 12 கோடியே 53 லட்ச ரூபாயாக அதிகரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |