ராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அனுப்ப முடியாது: ஐரோப்பிய நாடொன்று முடிவு
பிரான்சும் பிரித்தானியாவும் முன்வைத்துள்ள திட்டத்துக்கிணங்க தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அனுப்ப இத்தாலி மறுப்பு தெரிவித்துள்ளது.
ராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அனுப்ப முடியாது
ரஷ்ய உக்ரைன் போரில், உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகளின் ராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அனுப்புவது தொடர்பில் பிரான்சும் பிரித்தானியாவும் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளன.
ஆனால், இத்தாலி நாட்டின் பிரதமரான ஜார்ஜியா மெலோனி, தம் நாட்டு ராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அனுப்ப முடியாது என்று கூறிவிட்டார்.
பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் முன்வைத்துள்ள திட்டம் குறித்து இத்தாலிக்கு சந்தேகங்கள் இருப்பதாக தெரிவித்துள்ள மெலோனி, அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம் என்று கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் அனைத்துமே உக்ரைனில் அமைதி நிலவவேண்டும் என்றும் நீடிக்க வேண்டும் என்றும்தான் விரும்புகின்றன.
என்றாலும், பிரான்சும் பிரித்தானியாவும் முன்வைத்துள்ள திட்டம் அந்த விடயத்தில் எத்தகைய பலனைத் தரும் என்பது குறித்து தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்று கூறியுள்ள மெலோனி, ஆகவே, இத்தாலி நாட்டு ராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அனுப்ப முடியாது என்று அறிவித்துவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |