உக்ரைனில் இருந்து சொந்த நாட்டுக்கு திரும்பிய ரஷ்யர்கள்: பலருக்கு கடுமையான காயங்கள்
இடம்பெயர்ந்த குர்ஸ்க் குடியிருப்பாளர்கள் 33 பேர், மீண்டும் உக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்கு திரும்பியுள்ளனர்.
குர்ஸ்க் குடியிருப்பாளர்கள்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், குர்ஸ்க் பிராந்தியத்தைச் சேர்ந்த 33 குடியிருப்பாளர்கள் உக்ரைனில் இருந்து ரஷ்யாவுக்கு திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து ஜனாதிபதி மனித உரிமைகள் ஆணையர் Tatyana Moskalkova கூறுகையில், "தென்மேற்கு ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியைச் சேர்ந்த 33 பேர் உக்ரைனில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் வயதானவர்கள் மற்றும் நான்கு குழந்தைகளும் உள்ளனர்.
பலருக்கு கடுமையான காயங்கள் மற்றும் நோய் உள்ளது. ஆகத்து மாதம் ஊடுருவியதில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட குர்ஸ்க் குடியிருப்பாளர்கள் வலுக்கட்டயமாக இடம்பெயர்ந்தனர்.
ஆனால், கடந்த வாரம் கீவ் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்துடன் மாஸ்கோ, வெளியிடப்படாத எண்ணிக்கையிலான குர்ஸ்க் குடியிருப்பாளர்களை உக்ரைனில் இருந்து பெலாரஸ் வழியாக சொந்த மண்ணுக்கு அனுப்ப வேண்டும் என ஒப்பந்தம் மேற்கொண்டது" என்றார்.
9 பேர் மருத்துவமனையில்
மேலும் அவர், பேச்சுவார்த்தைகளுக்கு உதவியதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பெலாரஸ் குழுவிற்கு பாராட்டு தெரிவித்தார்.
இதற்கிடையில், திரும்பி வந்தவர்களில் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மீதமுள்ளவர்கள் செவ்வாய் அன்று குடும்பத்தினருடன் மீண்டும் இணைவார்கள் என்றும் குர்ஸ்க் பிராந்திய ஆளுநர் அலெக்ஸாண்டர் கின்ஷ்டீன் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |