வங்கியை கொள்ளையடிக்க போட்ட திட்டம்: சுரங்கப்பாதையில் சிக்கி பொலிஸாரால் மீட்கப்பட்ட திருடன்
- சுரங்கப் பாதையில் சிக்கிய நபர் எட்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு
- வங்கியை கொள்ளையடிப்பதற்கு சுரங்கத்தை தோண்டியதாக பொலிஸார் குற்றச்சாட்டு
ரோமில் இடிந்து விழுந்த சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட நபர், வங்கியை கொள்ளையடிப்பதற்கான விரிவான சதித்திட்டத்தின் ஒற்றை பகுதியாக அதை தோண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இத்தாலிய தலைநகர் ரோமில் வியாழன்கிழமை இடிந்த சுரங்கப்பாதையில் இடிபாடுகளுக்கு அடியில் ஒருவர் சிக்கி இருப்பதாக கராபினேரி காவல்துறையிருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
CNN
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் சுமார் எட்டு மணி நேரம் செலவு செய்து இடிபாடுகளில் சிக்கிய நபரை மீட்டு, சான் கமிலோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கிய நபர் பொது விடுமுறையின் அமைதியை பயன்படுத்தி வங்கியை கொள்ளையடிப்பதற்கான விரிவான வரைப்படத்துடன் தோண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
AFP
கூடுதல் செய்திகளுக்கு: சல்மான் ருஷ்டியை தாக்கியவருக்கு குவியும் பாராட்டு: அதிரவைக்கும் ஈரானிய பத்திரிக்கைகளின் தலைப்புகள்
அவருடன் சேர்த்து மேலும் நான்கு நபர்களை போலிஸார் கைது செய்து விசாரித்து வருவதாக கராபினேரி காவல்துறையின் பத்திரிகை அலுவலகம் CNN செய்தி நிறுவனமிடம் தெரிவித்துள்ளது.