பார்முலா 1 கார் பந்தயத்தில் 19 வயதில் முதலிடம் பிடித்த இத்தாலி வீரர்
சீன பார்முலா 1 கார் பந்தயத்தில் இத்தாலியின் கிமி அன்டோனெல்லி முதலிடம் பிடித்தார்.
19 வயதில் முதலிடம்
சீனாவின் ஷாங்காய் நகரில் பார்முலா 1 கார் பந்தயம் நடந்தது. சீன கிராண்ட்பிரீ இரண்டாவது சுற்று நேற்று நடந்தது.

இதில், இத்தாலியைச் சேர்ந்த கிமி அன்டோனெல்லி (Kimi Antonelli) பந்தய தூரத்தை ஒரு மணிநேரம் 33 நிமிடங்களில் எட்டினார்.
இதன்மூலம் அவர் 21 வீரர்களை கடந்து முதலிடம் பிடித்தார். மேலும், பார்முலா 1 கார்பந்தயத்தில் குறைந்த வயதில் வெற்றி கண்ட இரண்டாவது வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.

19 வயதாகும் கிமி அன்டோனெல்லி இந்த வெற்றியின் மூலம் 25 புள்ளிகள் பெற்றார்.
அவரை விட 5.515 வினாடி மட்டுமே பின்தங்கிய இங்கிலாந்து வீரர் ஜார்ஜ் ரஸ்செல் (மெர்சிடஸ் அணி) இரண்டாவதாக வந்து 18 புள்ளிகள் பெற்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |