ஸ்பெயினுடனான ஷெங்கன் விதியை இடைநீக்கம் செய்த இத்தாலி: பிரான்சுடன் கூட்டு ஒப்பந்தம்
ஸ்பெயின் உடனான ஷெங்கன் விதிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இத்தாலி அறிவித்துள்ளது.
அதிருப்தியை வெளிப்படுத்திய ஸ்பெயின்
வியாழக்கிழமையன்று மொராக்கோவில் இருந்து கிட்டத்தட்ட 500000 மக்கள் ஸ்பெயினின் சியூட்டா(Ceuta) பகுதிக்குள் ஒரே நேரத்தில் முயன்றனர். இது ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் விசா இல்லாத ஷெங்கன் பயண மண்டலத்திலிருந்து ஸ்பெயினை இடைநீக்கம் செய்ய வேண்டும் என இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி கோரிக்கை விடுத்து இருந்தார்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் மெலோனி வெளியிட்ட தகவலில், ஷெங்கன்(Schengen) பயண மண்டலத்திலிருந்து ஸ்பெயினை இடைநீக்கம் செய்து தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம், மேலும் இது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
அத்துடன் சியூட்டா நகரத்தில் இருந்து வெளிவரும் காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் மெலோனி தெரிவித்து இருந்தார்.
ஷெங்கன் விதியை இடைநீக்கம் செய்த இத்தாலி
இந்நிலையில் முக்கிய கொள்கை மாற்றமாக, ஸ்பெயின் உடனான விசா மற்றும் கடவுச் சீட்டு இல்லாத ஷெங்கன் பயண முறையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இத்தாலி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சியூட்டா நகரத்தில் நடந்த நிகழ்வே இந்த அதிரடி நடவடிக்கைக்கான முக்கிய காரணம் என்று இத்தாலிய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த இடைக்கால தடை தவிர இத்தாலி - பிரான்ஸ் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் எல்லையில் சோதனைகளை தீவிரப்படுத்த பிரான்ஸ் அரசுடன் கூட்டு ஒப்பந்தமும் செய்யப்பட்டு இருப்பதாக உள்துறை அமைச்சகம் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |