கொரோனாவை நான் தான் பரப்பினேன்! சீனா இல்லை: பகீர் கிளப்பும் மகள்களை நரபலி கொடுத்த தாய் பத்மஜா
இந்தியாவில் மகள்களை நரபலி கொடுத்த பத்மஜா என்பவர், கொரோனா பரவியதற்கு சீனா காரணம் இல்லை, நான் தான் பரப்பினேன் என்று கூறியுள்ளார்.
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவநகரில் வசித்து வந்தவர்கள் புருஷோத்தம் நாயுடு- பத்மஜா தம்பதி.
இதில் புருஷோத்தம் நாயுடு மகளிர் கல்லூரியின் துணை முதல்வராகவும், பத்மஜா தனியார் கல்லூரி நிறுவனத்தின் பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களின் மூத்த மகள் அலெக்கியா (27) மேனேஜ்மென்ட் ஆப் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் படித்து வந்தார்.
இளைய மகள் சாய் திவ்யா (22) ஏ.ஆர். ரஹ்மானின் இசை கல்லூரியில் பயின்று வந்தார்.
இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இவர்கள் இருவரையும் உடற்பயிற்சி செய்யும் கருவியால் பெற்றோர் அடித்து கொன்றதுடன், அவர்களை நிர்வாணப்படுத்தி பூஜை அறையில் வைத்து ஏதோ பூஜை செய்துள்ளனர்.
இது குறித்த தகவல் பொலிசார் பொலிசாருக்கு தெரியவர, பொலிசார் அவர்களை கைது செய்தனர். சொந்த மகள்களை இப்படி கொலை செய்து, நிர்வாண பூஜை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், நான்தான் சிவன். கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து வரவில்லை.
எனது உடல் பாகத்திலிருந்து வந்தது. நான் மனித உருவில் இருக்கும் கொரோனா. வரும் மார்ச் மாதம் கொரோனா போய்விடும்.
தடுப்பூசியெல்லாம் போட்டுக்காதீங்க என கூறிய பத்மஜாவை சமாதானப்படுத்த புருஷோத்தமன் முயன்ற போது என்னை தொடாதே நீ இப்போது என் கணவர் இல்லை. நான் சிவன் என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் எங்கள் மகள்களின் உடலில் தீயசக்தி சென்றுவிட்டது. அதை கொல்வதற்காகத்தான் இப்படி செய்தோம்.
தீயசக்தி இருந்ததால்தான் அவர்கள் உடனே இறக்காமல் பல மணி நேரமாக இழுத்துக் கொண்டு கிடந்தார்கள் என்றார்.
அப்போது புருஷோத்தமன் கூறுகையில் நான் ஒன்றும் முட்டாள் இல்லை, பிஎச்டி முடித்தவன். எங்களுக்கு தகவல் வந்தபடி செய்தோம் என சர்வசாதாரணமாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
