இந்தியாவில் மிகவும் விலை குறைவான Electric Scooter அறிமுகம்! மொடல் மற்றும் விலை விவரங்கள்
ஐவூமி (iVOOMi) நிறுவனம் இந்தியாவில் மிக மிக விலை குறைவான Electric Scooter மொடலை அறிமுகம் செய்துள்ளது.
எஸ்1 லைட் (S1 Lite)
ஐவூமி (iVOOMi) நிறுவனம் இந்தியாவில் எஸ்1 லைட் (S1 Lite) என்னும் Electric Scooter மொடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் அறிமுக விலையாக ரூ.54,999 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது Ex-showroom விலை ஆகும்.
இந்த ஸ்கூட்டருக்கு 3 ஆண்டு வாரண்டியை (warranty) நிறுவனம் கொடுக்கிறது. மேலும், இதில் அட்வான்ஸ்டு அம்சம் கொண்ட Battery pack உள்ளது. இது 7 அடுக்கு பாதுகாப்பு திறன் கொண்டதாகும்.
இந்த ஸ்கூட்டரை நாம் பியர்ல் ஒயிட் (pearl white), மூன் கிரே (moon grey), ஸ்காலட் ரெட் (scarlet red), மிட்நைட் ப்ளூ (midnight blue), ட்ரூ ரெட் (true red) மற்றும் பீகாக் ப்ளூ (peacock blue) என ஆறு வித நிற தேர்வுகளில் வாங்கி கொள்ள முடியும்.
தற்போது இது தமிழ்நாடு, குஜராத், தெலங்கானா, ராஜஸ்தான் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களிலேயே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரானது கிராபீன் அயன் (Graphene ion) மற்றும் லித்தியம் அயன் (Lithium Ion) ஆகிய இரண்டு பேட்டரி விருப்பங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. அவை விலைகள் முறையே ரூ. 54,999 மற்றும் ரூ. 64,999 ஆகும்.
இது ஒரு முழு சார்ஜில் 75 கிமீ முதல் 85 கிமீட்டருக்கும் அதிகமான Mileage தரும். மேலும் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக மாத தவணை திட்டத்தின்கீழ் இதனை பெற முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |