முழு சார்ஜில் 180 Km செல்லும் புதிய Electric Scooter.., அதுவும் மிக குறைவான விலையில்
ஐவூமி (iVOOMi) நிறுவனமானது, விற்பனைக்கு அறிமுகம் செய்த புதிய எஸ்1 லைட் (S1 Lite) எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
S1 Lite Electric Scooter
ஐவூமி (iVOOMi) நிறுவனம் அறிமுகம் செய்த புதிய எஸ்1 லைட் (S1 Lite) எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.84,999 ஆகும்.
இந்திய மாநிலங்களான மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலுங்கானா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஐவூமி (iVOOMi) நிறுவனத்தின் ஷோரூம்கள் உள்ளன. அங்கு, இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை புக் செய்து கொள்ளலாம்.
இந்த ஸ்கூட்டரில் 60 வோல்ட் 52 ஆம்பியர் லித்தியம்-இரும்பு பேட்டரி உள்ளது. இதனை முழுவதுமாக சார்ஜ் செய்து கொண்டால் 180கிமீ தொலைவிற்கு செல்லலாம்.
மேலும், இந்த பேட்டரிக்கு 3 வருட உத்தரவாதத்தை ஐவூமி நிறுவனம் வழங்கியுள்ளது. இதனை முழு சார்ஜ் செய்ய 4 மணி நேரங்கள் ஆகும்.
இதில் உள்ள எலக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 1.2 கிலோவாட்ஸ் பவர் மற்றும் 10.1 என்.எம் டார்க் திறன் கொண்டவையாகும். இதன் டாப்-ஸ்பீடு (Top-speed) 53kmph ஆகும்.
இதில் LED display உள்ளது. ரூ.4,999ஐ கூடுதலாக நாம் செலுத்தினால் இந்த டிஸ்பிளேவில் Smartphone connectivity DTE indicator, turn-by-turn navigation, SMS/call alerts ஆகிய வசதியை பெறலாம். இதில் மொபைல் போனை சார்ஜ் செய்வதற்கான யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |