7 ரன்னுக்கு ஆல்அவுட் ஆன அணி! சர்வதேச கிரிக்கெட்டில் படுமோசமான சாதனை
நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில், ஐவோரி கோஸ்ட் அணி 7 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆகி மோசமான சாதனை படைத்துள்ளது.
271 ஓட்டங்கள் குவித்த நைஜீரியா
டி20 உலகக்கிண்ண தொடருக்கான ஆப்பிரிக்க அணிகளின் தகுச்சுற்றுப் போட்டியில், ஐவோரி கோஸ்ட் மற்றும் நைஜீரியா அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய நைஜீரியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 271 ஓட்டங்கள் குவித்தது. செலிம் சலாவு 53 பந்துகளில் 2 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 112 ஓட்டங்கள் விளாசினார்.
ஐசாக் ஒக்பே 23 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்களும், சுலைமான் ருன்செவெ 29 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்களும் குவித்தனர்.
ஐவோரி கோஸ்ட் ஆல்அவுட்
இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஐவோரி கோஸ்ட் அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 7.3 ஓவர்கள் வரையே தாக்குப்பிடித்த அந்த அணி, வெறும் 7 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன்மூலம் சர்வதேச டி20யில் குறைந்த ஓட்டங்களுக்கு சுருண்ட அணி எனும் மோசமான சாதனையை படைத்தது.
நைஜீரியா தரப்பில் ஐசாக், ப்ரொஸ்பெர் தலா 3 விக்கெட்டுகளும், பீட்டர் அஹோ 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
குறைந்த ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆன அணிகள் (ஆடவர்)
- ஐவோரி கோஸ்ட் - 7 ஆல்அவுட் (எதிரணி நைஜீரியா)
- மங்கோலியா - 10 ஆல்அவுட் (எதிரணி சிங்கப்பூர்)
- ஐஸ்லே ஆஃப் மேன் - 10 ஆல்அவுட் (எதிரணி ஸ்பெயின்)
- மங்கோலியா - 12 ஆல்அவுட் (எதிரணி ஜப்பான்)
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |