கொட்டித் தீர்த்த கனமழை: வெள்ளத்தில் 59 பேர் உயிரிழப்பு: தத்தளிக்கும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகள்
மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் பெய்த கனமழையில் இதுவரை 59 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனமழையில் 59 பேர் உயிரிழப்பு
மேற்கு ஆப்பிரிக்க நாடான ஜவரி கோஸ்ட்(Ivory Coast) மற்றும் கானா(Ghana) ஆகிய நாடுகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை டஜன் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
ஐவரி கோஸ்ட்டில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய கனமழையில் ஏற்பட்ட பாதிப்புகளில் மட்டும் கிட்டத்தட்ட 59 பேர் உயிரிழந்துள்ளனர்.
தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் தேசிய ஒருங்கிணைப்பு துறை அமைச்சர் பெல்மாண்டே டோகோ வெளியிட்ட தகவலின் படி, பொருளாதார தலைநகரான அபிட்ஜானில் உள்ள யோபூகோன் மற்றும் அத்தேகூப் பகுதியில் மழை வெள்ள பாதிப்பு அதிகளவு ஏற்பட்டு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கானாவிலும் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 12 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
அக்ரா மற்றும் டெமா ஆகிய நகரங்களின் சில பகுதிகள் மழை வெள்ளத்தின் காரணமாக முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிக அளவு தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் மீட்பு பணிகளுக்கு ராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |