இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் ஐபிஎல் ஏலத்திற்கு சென்ற வீரர் - யார் இந்த இசாஸ் சவாரியா?
எந்த ஒரு உள்ளூர் போட்டியிலும் விளையாடாமல், சமூகஊடகம் மூலம் கவனம் பெற்று ஐபிஎல் ஏலத்தில் இடம்பெற்ற முதல் வீரராக இசாஸ் சவாரியா உள்ளார்.
2026 ஐபிஎல் மினி ஏலம்
2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று மதியம் 2;30 மணிக்கு(இந்திய நேரப்படி) அபுதாபியில் நடைபெற உள்ளது.

இதில் 10 அணிகள், 77 வீரர்களை ஏலம் எடுக்க உள்ளது. இதில், 240 இந்திய வீரர்களும், 110 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர்.
எந்த வீரரை, எந்த அணி ஏலம் எடுக்க உள்ளது என ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
பல ஜாம்பவான்கள் இந்த ஏலத்தில் பங்குபெறும் நிலையில், எந்த ஒரு உள்ளூர் போட்டியிலும் விளையாடாமல் ஒருவர், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் கவனம் பெற்று, ஐபிஎல் ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இசாஸ் சவாரியா
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 20 வயதான இசாஸ் சவாரியா(izaz sawaria), இதுவரை எந்த ரஞ்சி கோப்பை போன்ற எந்த ஒரு உள்ளூர் போட்டிகளிலும் பங்குபெற்றதில்லை.

சன்ஸ்கர் கிரிக்கெட் அகாடமியில் சுரேந்திர சிங் ரத்தோர் என்பவரின் கீழ் பயிற்சி பெற்று வருகிறார். வேகப்பந்து வீச்சாளராக தனது பயிற்சியை தொடங்கிய இவர், பயிற்சியாளரின் அறிவுறுத்தலுக்கு பின்னர் சுழற்பந்து வீச்சாளராக மாறினார்.
ஒவ்வொரு நாளும் தான் பயிற்சி செய்வதை ஸ்டம்ப்பிற்கு பின்னால் கேமரா வைத்து பதிவு செய்து அதை இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்.
இதன் மூலம், அவர் கிரிக்கெட் ரசிகர்களிடம் பிரபலமானதோடு மட்டுமல்லாமல், அடில் ரஷீத், தப்ரைஸ் ஷம்சி போன்ற வீரர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), பஞ்சாப் கிங்ஸ் (PBKS) ஆகிய அணிகள் அவரை அணுகி, சோதனைகளுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளன.
இது குறித்து பேசிய இசாஸ் சவாரியா, "சமூகஊடகம் மூலம் கவனம் பெற்று ஐபிஎல் ஏலத்தில் இடம்பெற்ற முதல் வீரர் நானாக தான் இருப்பேன்.
நான் தோனியின் பெரிய ரசிகன். சிறு வயதில் இருந்த CSK அணியை ஆதரித்து வருகிறேன். எனக்கு வாய்ப்பு கிடைத்தால், CSK அணிக்குச் செல்ல விரும்புகிறேன். ஆனால் ஒரு வீரராக, எந்த அணிக்காகவும் சிறப்பாகச் செயல்பட விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |